அல்ஜீரியா விமான விபத்து: பயணித்த 257 பேர் பலி எனத் தகவல்

வட ஆப்பிரிக்காவில் உள்ள அல்ஜீரியா மாநிலத்தின் Boufarik விமான நிலையம் அருகே விபத்து ஏற்பட்டது. இதில் 257 பேர் பலி என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.

அல்ஜீரியா தலைநகரில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 257 பேர் பலியானதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அல்ஜீரியா தலைநகரில் Boufarik விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு ராணுவ விமானம் புறப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாகப் புறப்பட்ட சில மணி நேரங்களில் விபத்துக்குள்ளானது. இது குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில், விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுவரை 257 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. மேலும் விமானத்தில் பயணித்த யாரும் உயிர் பிழைக்கவில்லை என்றும் தகவல் அளித்துள்ளது.

இந்தத் துயர சம்பவம் நிகந்ததன் காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நொறுங்கி விழுந்த விமானத்தில் இருந்து அடர்ந்த கருபுகை வெளியேறி வருவதால் சடலங்கள் மீட்பதில் கடினம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை சிறிது அவகாசத்திற்கு பிறகே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

×Close
×Close