பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

பரிசு தொகை இந்திய மதிப்பில் ரூ. 7.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வில்லியம் நார்தாஸ் மற்றும் பால் எம் ரோமர் ஆகியோர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை பெறுகின்றன.

இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டு நோபல் பரிசு அறிவிப்புகள் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தொடங்கின.

இந்நிலையில் நாள்தோறும் ஒவ்வொரு துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் இன்று (8.9.18) பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.வில்லியம் நார்தாஸ் மற்றும் பால் எம் ரோமர் ஆகிய பொருளாதார நிபுணர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

நீண்ட கால அடிப்படையிலான பொருளாதாரத்துக்கு உதவும் வகையில் தொழில்நுட்பங்களை உருவாக்கியதற்காகவும், பருவ நிலை மாற்றம் சார்ந்த பொருளாதார ஆய்வுக்காகவும் இவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

வில்லியம் நார்தாஸ் :

அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் நாதர்ஸ், ’யேல் பல்கலைக்கழகத்தில்’ சுற்றுச்சூழல் பொருளாதார துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதிகரித்து வரும் மக்கள் தொகையும், அதனால் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

பால் எம் ரோமர் :

அமெரிக்காவில் பிரபல பொருளாதார நிபுணராக இருந்து வரும் பால் எம். ரோமர், ’நியூ யார்க் பல்கலைக்கழகத்தில்’ பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நீண்ட கால அடிப்படையிலான பொருளாதாரத்துக்கு உதவும் தொழில்நுட்ப கண்டிபிடிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

இந்த துறைக்கான பரிசு தொகை இந்திய மதிப்பில் ரூ. 7.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

×Close
×Close