கொரோனா இயற்கையானதல்ல - நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சியாளர் கூறியது உண்மையா?

வுஹானில் இருக்கும் ஆராய்ச்சி மையத்திற்கு நான் போன் செய்த போது ஆராய்ச்சியாளர்கள் யாரும் ஃபோனை எடுக்கவில்லை. அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்.

Nobel Laureate Tasuku Honjo refutes claims of novel coronavirus being man-made : கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்நோய் எவ்வாறு உருவானது என்பதில் அறிவியல் பூர்வமான பல்வேறு சந்தேகங்கள் நிலவுகிறது. அமெரிக்கா, வுஹானில் இருக்கு வைராலஜி ஆய்வகத்தில் இருந்து தான் இந்நோய் பரவ துவங்கியது என்று குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதனை WIV தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானில், நோபல் பரிசு பெற்ற, ஆராய்ச்சியாளர் உடலியல் மற்றும் மருத்துவத்துறை பேராசிரியர் டாக்டர் . தாசுகு ஹோன்ஜோ (Tasuku Honjo) கொரோனா வைரஸ் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மேலும் படிக்க : ஆண் குழந்தையை பெற்றெடுத்த போரிஸ் ஜான்சனின் வருங்கால மனைவி

அந்த அறிக்கையில் “கொரோனா வைரஸ் இயற்கையானதல்ல. ஒரு நோய் சீனா போன்ற வெப்ப நிலை அதிகம் கொண்ட நாடுகளில் பரவுகிறது என்றால் ஸ்விட்சர்லாந்து போன்ற குளிர் பிரதேசங்களில் அதன் பாதிப்பு குறைவாக இருக்க வேண்டும். அதே வைரஸ் ஆப்பிரிக்காவின் பாலைவன பகுதிகளில் வாழ்வதற்கும் சாத்தியமற்றது தான். ஆனால் இந்நோய் அப்படியாக தோன்றவில்லை. மேலும் நான் 4 வருடங்கள் சீனாவில் பணியாற்றினேன். வுஹானில் இருக்கும் ஆராய்ச்சி மையத்திற்கு நான் போன் செய்த போது ஆராய்ச்சியாளர்கள் யாரும் ஃபோனை எடுக்கவில்லை. அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர். நிச்சயமாக இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட வைரஸ் தான்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க : கொரோனா வைரஸ் அறிகுறிகளை 9-ஆக உயர்த்தி அறிவித்த சி.டி.சி!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

ஜப்பானின் க்யோட்டோ பல்கலைகழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் ஹோன்ஜோ இந்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ”உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் பேரிழிப்பு என்னை வாட்டியுள்ளது. இந்த கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பும் என்னை வெகுவாக பாதித்துள்ளது.

என்னுடைய பெயரும், நான் பணியாற்றும் பல்கலைக்கழகத்தின் பெயரும் தவறாக இங்கே பயன்படுத்தப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. நான் சில ஆண்டுகள் சீனாவில் வேலை செய்தது உண்மை தான். ஆனால் கொரோனா குறித்து இப்படியான தவறான தகவல்களை நான் அளிக்கவில்லை என்பதை உறுதிபட தெரிவித்துள்ளார்.2018ம் ஆண்டு மருத்துவதற்கிற்கான நோபல் பரிசை ஹோன்ஜோவும் ஜேம்ஸ் ஆலிசனும், கேன்சர் தெரப்பிக்கான ஆராய்ச்சிக்காக பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : இவர்கள் நிஜ ஹீரோக்கள் : சென்னையில் இறந்தவரை 3000 மைல்கள் பயணித்து, குடும்பத்தினரிடம் ஒப்படைத்த தமிழர்கள்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close