Nobel Peace Prize :இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் மத்தியில் நிலவி வந்த பதட்டமான சூழலை மிகவும் தன்னம்பிக்கையுடன், நேர்த்தியாகவும் கையாண்டு பிரச்சனைகளை தவிர்த்திருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். இதனைத் தொடர்ந்து அவருக்கு அமைதிக்கான நோபில் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Nobel Peace Prize : இந்த பரிசினை பெற எனக்கு தகுதியில்லை
இந்நிலையில் இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், நோபல் பரிசு பெரும் அளவிற்கு தகுதியுடையவன் நான் இல்லை. காஷ்மீர் மக்களின் பிரச்சனைகளை சரிவர கையாண்டு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து, இந்த துணை கண்டத்தில் அமைதி மற்றும் மனிதவள மேம்பாட்டினை உருவாக்குபவர்களுக்குத் தான் நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
March 2019