Nobel Prize 2019 for physics awarded to 3 scientists : 7ம் தேதி முதல் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று மருத்துவத்திற்கான நோபல் பரிசினை மூவருக்கு வழங்கியது நோபல் பரிசு கமிட்டி. ஆக்ஸிஜனின் பற்றாக்குறையால் செல்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த அவர்களின் ஆராய்ச்சிக்கு இந்த பரிசு வழங்கப்பட்டது. இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நேற்று போன்றே இன்றும் மூவர் இந்த பரிசினை பகிர்ந்து கொள்கின்றார்கள்.
மேலும் படிக்க : 3 பேருக்கு வழங்கப்பட்டது இந்த வருடத்தின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு
இந்த வருடத்தில் இயற்பியலுக்கான நோபல் பரிசினை ஜேம்ஸ் பீப்லெஸ், மிச்செல் மேயர், மற்றும் டிடியர் க்யூலோஸ் ஆகியோர் பெறுகின்றனர். ஸ்வீடனின் ஸ்டாக்ஹோல்மில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டது. பேரண்டம் குறித்த ஆய்வுகளுக்காக இம்மூவருக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டது. பேரண்டம் தோன்றியது மற்றும் வளர்ச்சி குறித்த ஆராய்ச்சிக்காக ஜேம்ஸ் பீப்லஸூக்கும், சூரிய குடும்பத்திற்கு அப்பாற்பட்ட கோள்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதால் மிச்செல் மேயர் மற்றும் டிடியர் க்யூலோஸூக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.