நோபல் பரிசு 2021; வேதியியலுக்கான விருது பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் மேக்மில்லனுக்கு அறிவிப்பு
Nobel Prize 2021 in Chemistry awarded to Benjamin List and David MacMillan: பெஞ்சமின் மற்றும் மேக்மில்லனுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு; ராயல் ஸ்வீடிஷ் அகடமி அறிவிப்பு
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த டேவிட் மேக்மில்லன் ஆகிய இருவரும் சமச்சீரற்ற ஆர்கனோகாடலிசிஸின் (கரிம வினையூக்கிகள்) "மூலக்கூறு கட்டுமானத்திற்கான புதிய மற்றும் தனித்துவமான கருவியை" உருவாக்கியதற்காக 2021 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றனர்.
Advertisment
"ரசாயன எதிர்வினைகளை இயக்க கரிம வினையூக்கிகள் பயன்படுத்தப்படலாம்" என்று ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், "இந்த எதிர்வினைகளைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் இப்போது புதிய மருந்துகள் முதல் சூரிய மின்கலங்களில் ஒளியைப் பிடிக்கக்கூடிய மூலக்கூறுகள் வரை எதையும் மிகவும் திறமையாக உருவாக்க முடியும்." என்றும் அது தெரிவித்துள்ளது.
இந்த வினையூக்கிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை மற்றும் உற்பத்தி செய்ய மலிவானவை என்று ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் கூறியது.
நூற்றாண்டுக்கும் மேலான நோபல் பரிசு ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸால் வழங்கப்படுகிறது மற்றும் இதன் மதிப்பு 10 மில்லியன் ஸ்வீடிஷ் க்ரௌன்ஸ் ($ 1.14 மில்லியன்).
நோபல் பரிசுகள், அறிவியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான சாதனைகளுக்காக, ஸ்வீடிஷ் டைனமைட் கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழிலதிபர் ஆல்ஃபிரட் நோபலின் விருப்பத்தில் உருவாக்கப்பட்டு நிதியளிக்கப்பட்டு வருகிறது. நோபல் பரிசுகள் 1901 முதல் வழங்கப்பட்டு வருகிறது, பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு முதன்முதலில் 1969 இல் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுகளின் அறிவிப்பில் வேதியியலுக்கான விருது மூன்றாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வார தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட மருத்துவம் அல்லது உடலியல் மற்றும் இயற்பியலுக்கான பரிசுகளை தொடர்ந்து வேதியியலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் வேதியியலுக்கான நோபல் பரிசு வென்றவர்களில் மேரி கியூரி மற்றும் ஃப்ரெட்ரிக் சாங்கர் ஆகியோர் இரண்டு முறை வென்றுள்ளனர்.
டிஎன்ஏவைத் திருத்தக்கூடிய மரபணு 'கத்தரிக்கோலை' உருவாக்கியதற்காக கடந்த ஆண்டுப் பரிசு பெற்ற இம்மானுவேல் சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் டவுட்னா உட்பட ஏழு பெண்கள் இதுவரை நோபல் பரிசு பெற்றுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil