Nobel Prize in Medicine goes to 3 scientists who discovered Hepatitis C virus : 2020ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று நபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெபடைடிஸ் சி வைரஸ் கண்டுபிடிப்பிற்காக ஹார்வி ஜே ஆல்ட்டர், மைக்கேல் மற்றும் சார்லஸ் ஆகிய ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வ நோபல் பரிசு ட்விட்டர் பக்கத்தில், தற்போது ஹெபடைடிஸ் சி வைரஸை குணப்படுத்த இயலும். 2020ம் ஆண்டில் மருத்துவத்தில் நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு ஹெபடைடிஸ் நோய்க்கான காரணங்களையும், அதனை கண்டறியும் வகையிலான ரத்த பரிசோதனைகளையும், மருந்துகளையும் கண்டுபிடிப்பதற்கான வழியை உருவாக்கித்தந்துள்ளனர். தற்போது இந்த ஆராய்ச்சி மூலம் லட்சக்கணக்கான உயிரினங்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. நாளை இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil