'இந்திய வெறுப்பை இயல்பாக்குங்கள்': இனவெறி கருத்துகளால் எழுந்த சர்ச்சை - அமெரிக்க அதிகாரி ராஜினாமா

25 வயதான மார்கோ எலெஸ், அமெரிக்க அரசின் செலவினங்களை ஆய்வு செய்ய D.O.G.E-ஆல் பணியமர்த்தப்பட்டார். இவரது நீக்கப்பட்ட சமூக வலைதள பதிவுகள் குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், இவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

author-image
WebDesk
New Update
Musk

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிதாக உருவாக்கப்பட்ட அரசாங்கத் திறன் துறை அல்லது எலோன் மஸ்க் தலைமையிலான DOGE இன் முக்கிய ஊழியர் ஒருவர்,  இந்தியாவுக்கு எதிரான இனவாத சமூக ஊடகப் பதிவுகள் காரணமாக கடந்த வியாழக்கிழமை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தகவல் அளித்துள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Normalise Indian hate’: DOGE staffer resigns over racial posts

Advertisment
Advertisements

25 வயதான மார்கோ எலெஸ், அமெரிக்க அரசின் செலவினங்களை ஆய்வு செய்ய D.O.G.E-ஆல்  பணியமர்த்தப்பட்டார். இவரது நீக்கப்பட்ட சமூக வலைதள பதிவுகள் குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், இவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்படி கடந்த ஜூலை மாதத்தில், தான் ஒரு இனவெறி கொண்டவனாக இருந்ததாக அவரது சமூக வலைதள பதிவுகள் இருந்தது என  தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறுகிறது.

குறிப்பாக, 'இந்திய வெறுப்பை இயல்பாக்குங்கள்' என்றும் இனவெறியுடன் அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. சிலிக்கான் வேலியில் இந்தியர்கள் அதிகமாக வசிப்பதை சுட்டிக்காட்டும் விதமாக இந்த பதிவுகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, மார்கோ எலெஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறினார். 

முன்னதாக, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் அதன் ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்கள் மற்றும் எக்ஸ் உள்ளிட்டவற்றில் எலெஸ் பணியாற்றினார். அங்கு அவர் செயற்கை நுண்ணறிவில் கவனம் செலுத்தினார் என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மேற்கோள் கூறுகிறது

இதனிடையே, எக்ஸ் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தவிர, டெஸ்லாவையும் வைத்திருக்கும் மஸ்க், சமீபத்தில் எச்-1பி விசா வைத்திருப்பவர்களை பணியமர்த்துவதற்கு ஆதரவாக இருந்தார். H-1B திட்டம் அமெரிக்காவில் உள்ள வணிகங்களில், திறமையான வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கிறது.

India America

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: