Advertisment

கொரோனா சிகிச்சையில் இருந்து மீண்ட கணவன் ; மனைவி இறந்ததால் மருத்துவ சிகிச்சைகளை மறுத்து மரணம்!

ஏப்ரல் 15ம் தேதி, எந்த ஒரு மருத்துவ உதவியும் இன்றி இருந்த அவர், 5 நாட்கள் கழித்து உயிரிழந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனா சிகிச்சையில் இருந்து மீண்ட கணவன் ; மனைவி இறந்ததால் மருத்துவ சிகிச்சைகளை மறுத்து மரணம்!

American Nursing Assistant woke from a coma to find coronavirus had taken his wife : வெஸ்ட் மினிஸ்டர் சேர்ந்தவர் லாரன்ஸ் நோக்ஸ். இவரது வயது 69. இவருடைய மனைவி மின்னெட் (72). மார்ச் 30ம் தேதி கொரோனா வைரஸ் நோய் தொற்றால் அவதியுற்ற லாரன்ஸ் காரோல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நோக்ஸ், மேரிலேண்டை பூர்வீகமாக கொண்ட நோக்ஸ்,  ப்ளஸண்ட் வியூ நர்சிங் ஹோமில் நர்சிங் அசிஸ்டெண்ட்டாக பணியாற்றி  வந்தார்.  அங்கே வரும் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த போது அவருக்கும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது குறிப்பிட்டதக்கது.

Advertisment

அவர் உடல்நிலை மிகவும் மோசமடைய, நினைவிழந்து கோமாவை அடைந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, ஒரு வாரம் கழித்து, கோமாவில் இருந்து மீண்டார். தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரையும் பார்த்த அவரிடம் மிஞ்சியிருந்தது ஒரே ஒரு கேள்வி தான். தன் மனைவி எங்கே என்று விடாப்பிடியாக கேட்டுக் கொண்டே இருந்தார்.

மேலும் படிக்க : புலம் பெயர் தொழிலாளர்களுடன் சென்ற லாரிகள் நேருக்கு நேர் மோதல்! 24 பேர் பலி…

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“ 

அவருடைய குடும்ப உறுப்பினர்கள், தைரியத்தை வளர்த்துக் கொண்டு, மின்னெட் உயிரிழந்ததை அறிவித்தனர். மின்னெட்டின் 72வது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்பு, ஏப்ரல் 7ம் தேதி, அதிக சோர்வுடன் காணப்பட்ட அவர், தூக்கித்திலேயே மரணம் அடைந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தெரிந்து கொண்ட லாரன்ஸ் நோக்ஸ் தனக்கு தரப்படும் சிகிச்சை நிறுத்திக் கொள்ளலாம் என்றும், சுய நினைவு இல்லாமல் போனால் சி.பி.ஆர். பயன்படுத்த வேண்டாம் என்றும் do-not-resuscitate - ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.

மேலும் படிக்க : புலம் பெயர் தொழிலாளர்களுடன் சென்ற லாரிகள் நேருக்கு நேர் மோதல்! 24 பேர் பலி…

பிறகு தன்னுடைய குழந்தைகள் அனைவரையும் அழைத்து, யார் யாருக்கு தன்னுடைய உடமைகள் போய் சேர வேண்டும் என்று விளக்கினார். ஏப்ரல் 15ம் தேதி, எந்த ஒரு மருத்துவ உதவியும் இன்றி இருந்த அவர், 5 நாட்கள் கழித்து உயிரிழந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“ 

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment