Advertisment

இலங்கை மீனவர்களுக்கு தீராத மீன்பிடி வலை பிரச்னை-நெடுந்தீவில் என்ன நடக்கிறது?

கடந்த மாதம், கச்சத்தீவில் ஆண்டுதோறும் நடைபெறும் மத விழாவையொட்டி, இந்திய, இலங்கை மீனவர்கள், இருதரப்பு அரசுகளின் ஆதரவுடன், தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

author-image
WebDesk
New Update
இலங்கை மீனவர்களுக்கு தீராத மீன்பிடி வலை பிரச்னை-நெடுந்தீவில் என்ன நடக்கிறது?

இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள இந்த நெடுந்தீவில், இலங்கை அரசாங்கத்துடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் சீனாவை புறம்தள்ளி அந்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

Advertisment

தங்கள் தீவு மற்றும் அருகிலுள்ள நயினாதீவு மற்றும் அனலத்தீவு ஆகியவற்றில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மீனவர்கள் அறிந்திருக்கவில்லை.

இது கடந்த ஆண்டின் பெரும் பகுதியில் மத்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட திட்டத்தை ரத்து செய்தது இலங்கை.

பொருளாதார நெருக்கடியின் போது 2.4 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியுதவியை இலங்கை அளிக்க மத்திய அரசு உதவி கரம் நீட்டியதால், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் வருகையின் போது மார்ச் மாதம் இலங்கை-இந்தியா இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக நிலவும் மீன்பிடி நெருக்கடிக்குத் தீர்வுகாணுமாறும், நெருக்கடி நிலவும் இத்தகைய சூழ்நிலையில் மக்கள் நலத் திட்டங்களுடன் நிலைமையை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பாகப் பார்க்குமாறும் இலங்கையை மத்திய அரசு வலியுறுத்துகிறது.

நெடுந்தீவு என்ற தமிழ்ப் பெயரால் அழைக்கப்படும் Delft 50 சதுர கி.மீ., பரப்பளவில் பாக் ஜலசந்தியில் அமைந்துள்ளது. குறிகாட்டுவான் என்ற யாழ்ப்பாணப் பகுதியில் இருந்து ஒரு மணி நேர படகு சவாரியில் இந்த இடத்தை வந்தடைய முடியும்.

டெல்ஃப்ட் தமிழகத்தின் ராமேஸ்வரத்திலிருந்து வடகிழக்கே 45 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இதற்கு இடையில் கச்சத்தீவு உள்ளது.

இந்த முழுப் பகுதியிலும் இந்திய-இலங்கை மீனவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்தியாவும் இலங்கையும் கடந்த இரண்டு தசாப்தங்களாக மீனவர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண முடியவில்லை.

அண்ணாமலையை கைது செய்க: டி.ஜி.பி-யிடம் புகார்

கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனையத்தை அமைப்பதற்காக இந்தியா மற்றும் ஜப்பானுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை இலங்கை கடந்த ஆண்டில் ரத்து செய்தது.
சீன நிறுவனமான சினோசோர்-எடெக்வின்னுக்கு டெல்ஃப்ட் தீவில் 12 மில்லியன் டாலர் மதிப்புள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை இலங்கை அளித்திருந்தது.

இலங்கை மின் வாரியத்துடன் இணைந்து இந்த சூரிய மின்சக்தி திட்ட்துக்கு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. இதற்கு ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி செய்தது.

இந்த திட்டத்துக்கு இந்திய அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இது இந்தியாவின் பாதுகாப்பில் அச்சுறுத்தல் என்றும் கூறியது.

டெல்ஃப்ட் தீவு இந்திய எல்லைக்கு மிக அருகில் உள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியாவே இந்த திட்டத்துக்கு மானியம் அளிக்க முன்வந்தது. இதையடுத்து, சீனாவுடனான ஒப்பந்ததை நிறுத்தியது இலங்கை.

அதேநேரம், சீனாவும் இந்தியாவும் இந்த ஒப்பந்தத்தை இணைந்து செயல்படுத்த தொடர்ந்து முனைப்பு காட்டி வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் தேதி இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே டெல்லி வந்தார். அப்போது இலங்கை நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவும் அதற்கு நிதியுதவி அளிக்குமாறும் கோரினார்.

"நாங்கள் முதலில் இந்த திட்டத்தை ஒரு சர்வதேச நிதி நிறுவன கடனின் கீழ் செயல்படுத்த எண்ணினோம். மேலும் ஒரு சீன நிறுவனம் நிலையான ஏல செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் இந்திய அரசாங்கம் இந்த நோக்கத்திற்காக 75% மானியத்தை வழங்கியுள்ளது. எனவே, சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை தற்போதைக்கு ரத்து செய்துள்ளோம்” என்று சூரிய மின்சக்தி முன்னாள் அமைச்சர் துமிந்த திசநாயக்கே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த மூன்று தீவுகளிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் திட்டத்தை செயல்படுத்த இந்தியா-இலங்கை இடையே பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தம் மார்ச் மாதத்தில் கையெழுத்தானது.
ரெகீஸ்வரனுக்கு இந்தியா அல்லது சீனாவின் புதுப்பிக்கத்த எரிசக்தி ஆற்றல் திட்டம் குறித்து ஒன்றும் தெரியவில்லை.

அவருக்கு இருக்கும் ஒரே பிரச்னை இந்திய மீனவர்கள் எங்கள் வாழ்வாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர் என்பது மட்டுமாகவே இருக்கிறது.

“300 முதல் 500 படகுகளில் இந்திய மீனவர்கள் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவில் வருகிறார்கள். அது அவர்களின் மீன்பிடி நாட்கள் ”என்று 42 வயதான ரெகீஸ்வரன் கூறுகிறார்.

ஒவ்வொரு வலைக்கும் 30,000 ரூபாய் செலவாகும். ஒவ்வொருவரும் இரவில் பல வலைகளை தண்ணீரில் போடுகிறோம். இந்திய இழுவை படகுகள் உள்ளே செல்லும்போது, ​​அவர்கள் எங்கள் வலைகளைத் அறுத்துவிடுகிறார்கள். அடுத்த நாள் காலையில், எங்களால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு நாள் முழுவதும் காணாமல் போன வலைகளைத் தேடி அலைகிறோம். டீசல் செலவில் மேலும் ரூ.10,000 மற்றும் ஒரு நாள் வீணாகும் என்கிறார் ரெகீஸ்வரன்.

"பாட்டம் ட்ராலிங்" என்ற இந்திய நடைமுறை - அதிக எடையுள்ள இரட்டை மடிப்பு வலைகளை கடற்பரப்பிற்குள் இழுத்துச் செல்வது, சிறிய மீன்கள் கூட பிடிப்பதில் இருந்து தப்பிக்காத வகையில் - கடல் வாழ் உயிரினங்களை அவற்றின் பக்கம் அழித்து வருவதாக ஆரோக்கியதாஸ் கூறினார்.

தீவில் உள்ள ஆறு மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பிற்குத் தலைமை தாங்கும் லீலியன் குருஸ், இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைவது குறித்து டெல்ஃப்ட் காவல்துறைக்கு உள்ளூர் மீனவர்களின் புகார்கள் கொண்ட கோப்புகளைக் காட்டுகிறார்.

இந்திய மீனவர்களை இலங்கை தொடர்ந்து கைது செய்து வருகிறது. பிப்ரவரியில், இலங்கை கடற்படை 21 மீனவர்களை கைது செய்தது. இந்தக் கடற்பரப்பில் நான்கு இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

"ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் மூன்று நாட்கள் வருகிறார்கள். ஆனால் நாகப்பட்டினம், வேதாரண்யம் மற்றும் காரைக்கால் போன்ற தொலைதூர மீனவர்கள் வாரத்தில் ஏழு நாட்களும் வருகிறார்கள்" என்று குருஸ் கூறினார்.

கடந்த மாதம், கச்சத்தீவில் ஆண்டுதோறும் நடைபெறும் மத விழாவையொட்டி, இந்திய, இலங்கை மீனவர்கள், இருதரப்பு அரசுகளின் ஆதரவுடன், தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மீனவர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக இது போன்ற பேச்சுவார்த்தை இருந்து வருகிறது. குருஸும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.

“இந்தியத் தரப்பு அவர்களின் மீன்பிடி நடைமுறைகளை மாற்றுவதற்கு அல்லது பிற வாழ்வாதாரங்களுக்கு மாறுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் கேட்டது. ஆனால் எங்களுக்கு இரண்டு ஆண்டுகள் இல்லை” என்று அவர் கூறினார்.

“யுத்தம் முடிவடைந்த பின்னர், வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கும், வலைகள் மற்றும் படகுகளுக்கு வங்கிகளில் கடன் பெறுவதற்கும் இரண்டு மூன்று வருடங்கள் ஆனது, ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள வலைகள் அழிந்து போவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். உண்மை என்னவென்றால், இது எங்கள் கடல், ஆனால் நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை இங்கு தொடர முடியாது. அழிக்கப்படும் ஒவ்வொரு வலையும் பொருளாதார ரீதியிலும் மற்ற எல்லா வழிகளிலும் பல வருடங்கள் எங்களை பாதிக்கிறது” என்றார் குருஸ்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் கற்பிக்கும் அஹிலன் கதிர்காமர், மீன்பிடி பிரச்சினைக்கு இந்தியா தீர்வு காண வேண்டும் எனவும், இழுவை படகுகளை தடை செய்வதே இதற்கு ஒரே வழி எனவும் தெரிவித்தார். அப்படிச் செய்தால், தமிழகக் கடற்கரையிலிருந்து மீனவர்கள் இவ்வளவு தூரம் வர முடியாது.

பிரச்னைக்கு தீர்வு காண்பது மிகவும் முக்கியமானது என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment