சுமார் 89 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் தொற்று, டெல்டாவை விட அதி வேகமாக 1.5 நாள் முதல் 3 நாள்களில் இரட்டிப்பாகுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 16ந்தேதி வரையில் 89 நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த மாறுபாட்டின் தற்போதைய தாக்கம் குறித்து புதிய தரவுகள் வருகையில் கணிக்க முடியும்.
டெல்டாவை விட ஒமைக்ரான் வகை பெரிய அளவில் வளர்ச்சி அடைவதற்கான உறுதியான சான்று உள்ளது
இந்த புதிய வகை கொரோனாவானது சமூக பரவலாக காணப்பட கூடிய டெல்டா வகையை விட அதிவேக பரவலை கொண்டிருக்கிறது. ஒவ்வொரு 1.5 முதல் 3 நாட்களுக்கு ஒரு முறை இந்த ஒமைக்ரான் பாதிப்புகள் இரட்டிப்படைகின்றன.
ஒமிக்ரான் தீவிரம் குறித்து அறிவதற்கான தரவுகள் உள்ளது. ஆனால், மேலும் தரவுகள் கிடைக்கும் பட்சத்தில் தான் தடுப்பூசி செலுத்திகொண்டவர்களிடம் ஒமிக்ரான் எப்படி இருக்கிறது அல்லது இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி உள்ள நபர்களிடம் அதன் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதை துல்லியமாக அறிய முடியும் என கூறுகின்றனர்.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 30 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியான நிலையில், நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil