Advertisment

டெல்டாவை விட ஒமிக்ரானில் அதிக உயிரிழப்புகள் - அச்சத்தில் அமெரிக்கா

உலகளவில் அமெரிக்காவில் தான் அதிகப்பட்சமாக கொரோனா தொற்றுக்கு 8 லட்சத்து 78 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

author-image
WebDesk
Jan 30, 2022 14:45 IST
டெல்டாவை விட ஒமிக்ரானில் அதிக உயிரிழப்புகள் - அச்சத்தில் அமெரிக்கா

உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் ஒமிக்ரான் மாறுபாடு, அமெரிக்காவில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. கிடைத்த தரவுகளின்படி, அமெரிக்காவில் டெல்டா அலையின் போது ஏற்பட்ட தினசரி இறப்பு விகிதத்தை காட்டிலும், ஒமிக்ரானால் அதிகளவில் இறப்பது ஏற்படுவது தெரியவந்துள்ளது.

Advertisment

அமெரிக்காவில் தினசரி இறப்பு எண்ணிக்கை நவம்பர் பாதியிலிருந்து அதிகரித்து வருகிறது. வாரத்தில் நாள் ஒன்றுக்கு இறப்போரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டுகிறது. கடந்த வியாக்கிழமை 2,267 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், டெல்டா அலை உச்சத்தில் இருந்த போது, செப்டம்பரில் அதிகப்பட்சமாக தினசரி இறப்பு 2,100ஆக இருந்துள்ளது.

ஒமிக்ரான் லேசான பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறினாலும், அதிகளவில் பரவுவதன் காரணமாக பலர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழக்கின்றனர்.காய்ச்சலை போலவே, வயதானோர்களுக்கும், இணை நோயுள்ளவர்களுக்கும், தடுப்பூசி போடதவர்களுக்கு ஒமிக்ரான் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உலகளவில் அமெரிக்காவில் தான் அதிகப்பட்சமாக கொரோனா தொற்றுக்கு 8 லட்சத்து 78 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

சிடிசி அறிக்கையின்படி, ஏற்கனவே நியூ ஜெர்சி, பென்சில்வேனியா, அயோவா, மேரிலாந்து, அலாஸ்கா மற்றும் ஜார்ஜியா உள்ளிட்ட சில மாநிலங்களில் இறப்புகள் உச்சத்தை எட்டியிருந்தாலும், வரவிருக்கும் வாரத்தில், ஏறக்குறைய ஒவ்வொரு அமெரிக்க மாகாணத்திலும் இறப்புகள் வேகமாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Omicron #America
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment