கொரோனா வைரஸ் தொடர்பாக பல நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் வெவ்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், இங்கிலாந்தில் கொரோனா குறித்து நடத்தப்பட்ட ஆய்வு குறித்து தான் இச்செய்தி தொகுப்பில் பார்க்க போகிறோம். இருப்பினும், இந்த தரவுகள் உறுதியானதை என்பதை கண்டறிய மேலும் சில ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியுள்ளது. அதே போல், இந்த ஆய்வறிக்கைக்கு சக மதிப்பாய்வு சான்றியளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தின் சமீபத்திய ஆய்வுபடி, கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாட்டால் ஏற்படும் நோய்த்தொற்றின் தீவிரம் டெல்டாவை காட்டிலும் குறைவானதாகத் தெரியவில்லை என கண்டறிந்துள்ளனர்.
ஒமிக்ரான் தீவிரத்தன்மை
லண்டன் இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட அல்லது ஒமிக்ரான் பாதிப்பு இருக்கும் என சந்தேகித்த 11,329 பேரை, மற்ற வகைகளால் பாதிக்கப்பட்ட 200,000 பேருடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் தரவுகள் முடிவின்படி, ஒமிக்ரான் டெல்டாவை விட குறைவான தீவிரத்தன்மையைக் கொண்டிருப்பதற்கான எந்த ஆதாரத்தையும் கண்டறிய முடியவில்லை. இந்த முடிவானது, ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரின் விகிதம் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் செயல்பாட்டில் உள்ள தடுப்பூசிகளின் இரண்டு டோஸ், ஒமிக்ரானுக்கு எதிராக 0 முதல் 20 விழுக்காடு செயல்திறனும், பூஸ்டர் டோஸ் செலுத்தியிருந்தால் 55 முதல் 80 விழுக்காடு செயல்திறனும் உள்ளது.மேலும், டெல்டா கொரோனா மீண்டும் பாதிக்கப்படும் சாத்தியக்கூறுகளை கணக்கிட்டால் ஒமிக்ரானால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 5.4 மடங்கு அதிகமாக உள்ளது. அதே போல், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவருக்கு, மீண்டும் தொற்று ஏற்படாத வகையில் 6 மாதங்களுக்கு 85 விழுக்காடு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்.
விந்தணுக்களின் எண்ணிக்கை, இயக்கம் குறையலாம்
கொரோனா தொற்றிலிருந்து மீண்ட சிலருக்கு பல மாதங்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் இயக்கம் குறைந்து காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தொற்றால் விந்தணுக்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால், அறிகுறி நோய்த்தொற்றிலிருந்து மீண்டு ஒரு மாதத்திற்குள் மாதிரிகளை வழங்கிய 35 ஆண்களில், விந்தணுக்களின் இயக்கம் 60% ஆகவும், விந்தணுக்களின் எண்ணிக்கை 37% ஆகவும் குறைந்திருந்தது.
ஆய்வின்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 51 நாட்களான, 35 வயது மதிக்கத்தக்க 120 பெல்ஜிய ஆண்களிடமிருந்து விந்து மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. 51 பேரின் மாதிரியை பரிசோதித்தில், 37% பேருக்கு விந்தணு இயக்கம் குறைத்து காணப்பட்டுள்ளது மற்றும் 29% பேருக்கு குறைந்த விந்தணு எண்ணிக்கை இருந்துள்ளது.
அதே சமயம், கொரோனாவிலிருந்து மீண்டு இரண்டு மாதங்களான 34 ஆண்களின் விந்து மாதிரிகளை பரிசோதித்ததில், விந்தணு இயக்கம் 28% பலவீனமடைந்தும், விந்தணுக்களின் எண்ணிக்கை 6% குறைவாகவும் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. நோய் தொற்றின் தீவிரத்திற்கும் விந்தணுவுக்கும் எவ்வித தொடர்பு இல்லை.
கணக்கிட்டப்படி, 3 மாதங்களில் விந்தணு பாதிப்பு சரியாகலாம். இருப்பினும், கூடுதல் தரவுகளும், ஆய்வுகளும் செய்தால் மட்டுமே விந்தணு பாதிப்பு நிரந்தரமா இல்லையா என்பதை கண்டறிய முடியும் என கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.