77 நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்புகள்… அதிவேகமாக பரவும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

அறிகுறிகள் லேசானதாக இருந்தாலும், தயார்ப்படுத்தபடாத சுகாதார கட்டமைப்பின் மீது அதிகரிக்கும் கரோனா பரவலால் பெரும் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு (WHO),கொரோனா தொற்றின் முந்தைய மாறுபாடுகளுடன் ஒப்பிடுகையில் ஒமிக்ரான் மாறுபாடு அதிவேகமாக பரவக்கூடியது என்று எச்சரித்துள்ளது. மற்ற கரோனாவை ஒப்பிடுகையில் இதன் அறிகுறிகள் லேசானதாக இருந்தாலும், தயார்ப்படுத்தபடாத சுகாதார கட்டமைப்பின் மீது அதிகரிக்கும் கரோனா பரவலால் பெரும் பாதிப்பை ஏற்படுத்த முடியும்

WHO இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் பேசுகையில், தற்போது 77 நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்புகள் பதிவாகியுள்ளது.அதே சமயம், பாதிப்பு கண்டறியப்படாத பல நாடுகளிலும் ஒமிக்ரான் பரவியிருக்க வாய்ப்புள்ளது.ஒமிக்ரான் எந்த முந்தைய மாறுபாட்டிலும் நாம் காணாத விகிதத்தில் அதிவேகமாக பரவுகிறது. ஒமிக்ரான் லேசான பாதிப்பை தான் ஏற்படுத்தும் என மக்கள் அலட்சியம் காட்டுவது கவலையை ஏற்படுத்துகிறது. அறிகுறிகள் லேசானதாக இருந்தாலும், தயார்ப்படுத்தபடாத சுகாதார கட்டமைப்பின் மீது அதிகரிக்கும் கரோனா பரவலால் பெரும் பாதிப்பை ஏற்படுத்த முடியும்.

தடுப்பூசியால் மட்டுமே தொற்று நோய் பாதிப்பிலிருந்து நாட்டை காப்பாற்றிட முடியாது. மாஸ்க் பதிலாக தடுப்பூசி வரவில்லை. சமூக இடைவெளிக்கு பதிலாக தடுப்பூசி வரவில்லை.காற்றோட்டம் அல்லது கை சுகாதாரத்திற்கு பதிலாக தடுப்பூசிகள் வரவில்லை. அனைத்து பின்பற்றுவது அவசியமாகும்.

நோய் பாதிப்புக்கு எதிரான தடுப்பூசியின் செயல்திறன் சரிவை சந்தித்துள்ளதாக தரவு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதே சமயம், நாங்கள் பூஸ்டர் டோஸை எதிர்க்கவில்லை. அனைவருக்கும் சமமான முறையில் கிடைக்க வேண்டும் என்பதே தான் வலியுறுத்திகிறோம். கடுமையான நோய் அல்லது இறப்பு அபாயம் ஏற்படலாம் என்ற லோ ரிஸ்க் பிரிவில் இருப்பவர்களுக்கு பூஸ்டர்களை வழங்குவது, முழுமையாக தடுப்பூசி போடாமல் ஹை ரிஸ்க் பிரிவில் இருப்பவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.

குறைந்த ஆபத்தில் உள்ளவர்களுக்கு முதன்மை டோஸ் கொடுப்பதை விட அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் டோஸ் கொடுப்பது அதிக உயிர்களைக் காப்பாற்றும் என்பதையும் கவனித்தில் கொள்ள வேண்டும்.

டெல்டாவின் சமூக பரவலை ஒமிக்ரான் விஞ்சும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும், குறைவான அளவிலே தரவுகள் உள்ளன.தென்னாப்பிரிக்காவின் ஆரம்பக் கண்டுபிடிப்புகள் டெல்டாவை விட குறைவான தீவிரமானதாக இருக்கலாம் என்று கூறினாலும், EU/EEA இல் இன்றுவரை பதிவாகிய அனைத்து நிகழ்வுகளும் லேசானவை அல்லது அறிகுறியற்றவை. ஒமிக்ரான் எந்தளவிற்கு வீரியம் குறைவானது என்பதை கண்டறிய முடியவில்லை என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Omicron spread rapid sheer numbers can overwhelm says who

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express