Advertisment

ஒமிக்ரான் அதிகரிப்பு: கோவிட் நோயாளிகளில்... சாதனையை முறியடித்த அமெரிக்கா

அமெரிக்காவில் ஒமிக்ரான் தொற்று அதிகரித்துள்ளதால், அமெரிக்கா 1.3 லட்சத்திற்கும் அதிகமானமோர் கோவிட்-19 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது முந்தைய சாதனையை அமெரிக்கா முறியடித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Omicron surges, US breaks record in Covid-19 hospitalization over 132000 covid patients, usa america, ஒமிக்ரான் அதிகரிப்பு, அமெரிக்கா மீண்டும் சாதனை, அமெரிக்காவில் 132000 லட்சம் கோவிட் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதி, coronavirus, covid 19, tamilnadu, india, omicron covid

அமெரிக்காவில் கொரோனா வைரஸின் திரிபான டெல்டாவைத் தாண்டி ஒமிக்ரான் வைரஸ் வேகமாக அதிகரித்ததால் கடந்த மூன்று வாரங்களில் தொற்று எண்ணிக்கை இரட்டிப்பானது. இதனால், கடந்த டிசம்பர் பிற்பகுதியில் இருந்து அமெரிக்காவில் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது.

Advertisment

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்கின்படி, அமெரிக்காவில் கோவிட் -19 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திங்கள் கிழமை சாதனை அளவை எட்டியது. பல மாநிலங்களில் ஓமிக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கோவிட் தொற்றால் 1,32,646 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டு ஜனவரியில் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1,32,051 என்ற சாதனை அளவை முறியடித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸின் திரிபான டெல்டாவைத் தாண்டி ஒமிக்ரான் வைரஸ் வேகமாக அதிகரித்ததால் கடந்த மூன்று வாரங்களில் தொற்று எண்ணிக்கை இரட்டிப்பானது. இதனால், கடந்த டிசம்பர் பிற்பகுதியில் இருந்து அமெரிக்காவில் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது.

டெலாவர், இல்லினாய்ஸ், மைன், மேரிலாந்து, மிஸ்ஸௌரி, ஓஹியோ, பெனிசில்வேனியா, பூர்டோ ரிகோ, யு.எஸ் வெர்ஜின் தீவுகள், வெர்மாண்ட், வெர்ஜினியா, வாஷிங்டன் டிசி, விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஆய்வு செய்து இந்த சாதனை எண்ணிக்கையை தெரிவித்துள்ளது.

ஓமிக்ரான் வைரஸால் ஏற்படும் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையானது குறைவான தீவிரத்துடன் இருந்தாலும், மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையால் கடுமையாகக் கூடும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அவற்றில் சில மருத்துவமனைகள் பணியாளர்கள் பற்றாக்குறைக்கு மத்தியில் நோயாளிகளின் அதிகரிப்பை கையாள போராடுவதால் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட நடைமுறைகளை நிறுத்திவிட்டன.

புதிய தொற்றுகளுக்கான ஏழு நாள் சராசரி கடந்த 10 நாட்களில் இரட்டிப்பாகி 7,04,000 ஆக உள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆறு நாட்களாக சராசரியாக அரை மில்லியனுக்கும் அதிகமான தொற்றுகள் பதிவாகியுள்ளன.

அரிசோனா, இடாஹோ, மைனே, மொன்டானா, வடக்கு டகோட்டா, ஓஹியோ மற்றும் வயோமிங் ஆகிய ஏழு மாகாணங்கள் மட்டுமே 2022-ல் கோவிட்-19 தொற்றுகளுக்கான பதிவுகளை அமைக்கவில்லை.

வாஷிங்டன் டி.சி., கடந்த வாரத்தில் மக்கள்தொகை அடிப்படையில் புதிய நோய்த்தொற்றுகளில் நாட்டில் முன்னிலை வகிக்கிறது. அதைத் தொடர்ந்து ரோட் தீவு, நியூயார்க், நியூ ஜெர்சி, மாசசூசெட்ஸ் மற்றும் வெர்மான்ட் மாகாணங்கள் உள்ளன.

அமெரிக்காவில் கோவிட் இறப்புகள் சமீப நாட்களில் சுமார் 1,400 ஆக இருந்தது. ஆனால், இந்த குளிர்காலத்தின் தொடக்கத்தில் கோவிட் இறப்புகள் ஒரு நாளைக்கு சராசரியாக 1,700 ஆக உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus Omicron Covid 19 Usa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment