வைரலாகும் வீடியோ : பறக்கும் விமானத்தில் உள்ளாடையை காயவைத்த பெண்!

ஏசி வெண்ட்ரில் உள்ளாடையை காட்டி, எந்தவித கூச்சமுமின்றி காய வைத்துள்ளார்.

ஏசி வெண்ட்ரில் உள்ளாடையை காட்டி, எந்தவித கூச்சமுமின்றி காய வைத்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வைரலாகும் வீடியோ : பறக்கும் விமானத்தில் உள்ளாடையை காயவைத்த பெண்!

துருக்கி விமானத்தில் பயணித்த பெண் ஒருவர், ஏசி வெண்ட்டிற்கு கீழே தனது உள்ளாடையை காய வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisment

இணையதளங்களில் சமீப காலமாக விமானத்தில் நடக்கும் நிகழ்வுகள் அதிகமான விமர்சனங்களை எற்படுத்தி வருகிறது. அந்த வகையில்,  விமானத்திற்குள் பைல்ட்கள் இருவர் தாக்கிக் கொண்ட சம்பவம்,  விமான பணிப்பென் ஒருவர் கடத்தலில் ஈடுபட்டது, மாதவிடாய் வலியால் தவித்த பெண்ணை இறக்கி விட்டு சென்ற பைலட் என பல நிகழ்வுகள் இணையத்தில் அதிகம் பேசப்பட்டவை.

இந்நிலையில்,  துருக்கி விமானத்தில்,  பெண் ஒருவர் செய்த செயல், வைரல் வீடியோவாக மாறி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. துருக்கியின் அண்டால்யாவிலிருந்து மாஸ்கோ நோக்கிச் சென்று கொண்டிருந்த உரால் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவர் பயணித்துள்ளார். அப்போது அவருக்கு  ஏசி வெண்ட்டிற்கு கீழ் இருக்கும் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்டு சில மணி நேரம் கழித்து அந்த பெண், தனக்கு மேலே இருக்கும் ஏசி  வெண்ட்ரில்   உள்ளாடையை  காட்டி, எந்தவித கூச்சமுமின்றி  காய வைத்துள்ளார்.

பெண்ணின் இந்த செயலைக் கண்ட அருகில் இருந்த பயணி ஒருவர், இதை தனது ஃபோன் மூலம் வீடியோவாக  பதிவு செய்துள்ளார். பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினந்தன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. இதை வீடியோவாக எடுத்த நபர் கடந்த வாரம் இதை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.  மேலும், பறக்கும் விமானத்தில் பெண் உள்ளாடையை காய வைக்கும்போது, அங்கிருந்த எவரும் இதை தடுக்கவில்ல என்பது வீடியோ மூலமாக தெளிவாக தெரிகிறது.

Advertisment
Advertisements

https://www.youtube.com/watch?time_continue=61&v=xBhL8fc451U

 

 

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: