அமெரிக்காவில் மெகா பால் லாட்டரி சீட்டில் ஜாக்பாட் பரிசாக 11,708 கோடி ரூபாய் பரிசுத் தொகை விழுந்துள்ளது. இந்த மாபெரும் பரிசை தட்டிச் சென்ற அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா?
அமெரிக்கா லாட்டரி:
அமெரிக்காவில் உள்ள மெகா மில்லியன்ஸ் நிறுவனம் ஸ்பெஷல் மெகா பால் லாட்டரி சீட்டுகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு விற்பனை செய்தது. இந்த லாட்டரி சீட்டுக்கான குலுக்கல் கடந்த செவ்வாய்கிழமை நடைப்பெற்றது.
அப்போது, 5, 28, 62, 65, 70, 5 என்ற எண்ணுக்கு 1.6 பில்லியன் டாலர் ஜாக்பாட் விழுந்தது. இந்திய மதிப்பில் இது 11,708 கோடி ரூபாய் ஆகும். தெற்கு கரோலினாவில் விற்பனையான இந்த பரிசு சீட்டுக்கான உரிமையாளர் யார்? என்ற பெயர் தற்போது வரை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது மற்றொரு ஷாக்.
அதே நேரத்தில் பரிசு விழுந்த நபருக்கு பரித்தொகை எப்படி பகிர்ந்தளிக்கப்படும் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது.பரிசு விழுந்த நபருக்கு முதல் தவணையாக ஒரு பெரும் தொகை அளிக்கப்படுகிறது. மீதியுள்ள தொகை 29 ஆண்டுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்பது கூடுதல் தகவல்.
இந்த லாட்டரி பரிசில் எப்படி இவ்வளவும் பெரும் தொகை சேர்ந்தது என்பதற்கும் காரணம் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் இருந்து சரியான எண்ணை கூறி லாட்டரி சீட்டு வாங்காததால் சிறுகச்சிறுக சேர்ந்திருந்த ஜாக்பாட் பரிசுத்தொகை இப்போது 1.6 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இரட்டிப்பாகியுள்ளது.
இந்த லாட்டரி தொகைத்தான் அமெரிக்க லாட்டரி வரலாற்றிலியே மிகப்பெரிய ஜாக்பாட் பரிசாக கருதப்படுகிறது. இந்த பரிசுத் தொகையை வென்ற அதிர்ஷ்டசாலி யார்? என்பது தான் பலரின் எதிர்ப்பாக உள்ளது.
குறிப்பு: இந்த செய்திக்கான புகைப்படத்தில் இருப்பவர், வரலாற்றில் இடம்பெற்றுள்ள மெகா பால் லாட்டரி சீட் விற்கப்பட்ட கடை உரிமையாளர்