கட்டுப்பாடுகளை தளர்த்துவது பேரழிவிற்கு வழி வகுக்கும் - WHO எச்சரிக்கை!

நான்கு முக்கிய விதிமுறைகளை கூறி இதனை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும் என்று அதானம் அறிவிப்பு

நான்கு முக்கிய விதிமுறைகளை கூறி இதனை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும் என்று அதானம் அறிவிப்பு

author-image
WebDesk
New Update
Opening up socities too quickly amid covid19 will lead the disaster says WHO chief

Opening up socities too quickly amid covid19 will lead the disaster says WHO chief :  கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது கொரோனா பேரழிவிற்கு வழி வகுக்கும் என்று டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ் அறிவித்துள்ளார். உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 2.53 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 8 லட்சத்து 48 ஆயிரம் நபர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் பொருளாதாரம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் நிலவி வரும் சூழலில் உலக நாடுகள் பலவும் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றனர்.

Advertisment

மேலும் படிக்க : கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு: கூடுதல் பரிசோதனைதான் காரணமா?

நேற்று ஜெனிவாவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய கெப்ரியேசஸ் “அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்தி இயல்பு நிலைக்கு மக்கள் செல்கின்றனர். அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பரவலையும் கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஒரு புறம் கட்டுப்பாடுகளை தளர்த்தி மற்றொரு புறம் கொரோனாவை கடுப்படுத்துகின்றோம் என்பதால் சமநிலை உருவாகிவிடாது. இது கொரோனா மூலம் வர இருக்கும் பேரழிவிற்கு தான் வழி வகுக்கும் என்று கூறியுள்ளார்.

மக்கள் மொத்தமாக கூடும் இடங்களுக்கு தடை விதிக்க வேண்டும். எளிதில் நோய் தொற்றால் பாதிக்க கூடிய பிரிவினரை பாதுகாக்க வேண்டும். மக்கள் அனைவரும் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி, பரிசோதனை மேற்கொண்டு, கவனிக்க வேண்டும் என்று நான்கு முக்கிய விதிமுறைகளை கூறி இதனை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Who

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: