சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின் லேடனின் மகன் மரணம் – அமெரிக்கா தகவல்

Hamsa bin laden : அமெரிக்காவை பழிதீர்க்க, ஒரு சிங்கம் உருவாகிக்கொண்டிருக்கிறது. அந்த சிங்கம், அல் குவைதா இயக்கத்திற்கு பொறுப்பேற்று ,பழிவாங்கும்

By: August 1, 2019, 3:18:00 PM

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலின் மூளையாக செயல்பட்ட சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின் லேடனின் மகனும், அல்குவைதா பயங்கரவாத இயக்கத்தின் அடுத்த தலைவர் என்று அறியப்பட்ட ஹம்சா பின் லேடன் விமான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு, அமெரிக்க படைகள் பாகிஸ்தானின் அபோதாபாத் பகுதியில் நடத்திய அதிரடி வேட்டையில், சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்காவிற்கு இருந்த ஆபத்து நீ்ங்கியது என்று அனைவரும் கருதிய நிலையில், அமெரிக்காவை பழிதீர்க்க, ஒரு சிங்கம் உருவாகிக்கொண்டிருக்கிறது. அந்த சிங்கம், அல் குவைதா இயக்கத்திற்கு பொறுப்பேற்று ,பழிவாங்கும் என்று என்று ஒரு ஆடியோ, 2015ம் ஆண்டுவாக்கில் வெளியானது.

ஒசாமா பின் லேடனின் வாரிசாக அறியப்பட்ட ஷம்சா பின் லேடன் தான் அவர் என்றும், அவர் தலைமையில் மீண்டும் அல் குவைதா இயக்கம் தலைதூக்க வாய்ப்பிருப்பதாக அஞ்சிய அமெரிக்கா, கடந்த பிப்ரவரி மாதம், ஷம்சா பின் லேடன் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வெகுமதியாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஹம்சா பின் லேடன் பதுங்கியுள்ள இடம் குறித்த தகவல், அமெரிக்க புலனாய்வு அமைப்பிற்கு தெரிந்தநிலையில், வான்வெளி தாக்குதலை அமெரிக்கா நிகழ்த்தியதாகவும், அந்த தாக்குதலில் ஹம்சா பின் லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடந்த இடம் குறித்த விபரங்களை அவர்கள் வெளியிட மறுத்துவிட்டனர்.

இந்த செய்தியை, அமெரிக்காவின் NBC செய்தி சேனல் முதன்முறையாக வெளியிட்டது. இதுகுறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Osama bin ladens son hamza is dead

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X