Oxford researchers on Coronavirus : கொரோனா வைரஸூக்கு எதிரான போரில் பல்வேறு உலக நாடுகள் கடுமையாக போராடி வருகின்றன. மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் ஒரு புறம் என்றால், இந்த நோய்க்கு மருந்து கண்டு பிடிக்க தினமும் போராடும் ஆராய்ச்சியாளர்கள் மறுபுறம் நம்மை வியக்க வைக்கின்றார்கள். ஏற்கனவே கொரோனா தடுப்பூசிக்காக பில்கேட்ஸ் அறக்கட்டளை சோதனைகளில் இறங்கியுள்ளது.
மேலும் படிக்க : இன்று பரிசோதனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி… பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு
இந்நிலையில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் 23ம் தேதி, தங்களுடைய கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தியது. இந்த ஆராய்ச்சிகாக தங்களை அர்பணித்துள்ளனர் இரண்டு ஆராய்ச்சியாளர்கள். நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளர் எலிசா கிரணாட்டோவும்(Microbiologist Elisa Granato) , புற்றுநோய் ஆராய்ச்சியாளர் எட்வர்ட் ஓ நெய்லும் (Edward O'Neill) தங்களை இந்த ஆராய்ச்சி பணிகளுக்காக அர்பணித்துள்ளனர். 1000 பேரை தேர்வு செய்து அவர்களில் யாருக்கு முதலில் தடுப்பூசி போடுவது என்று முடிவான போது, இவர்கள் இருவரின் பெயர்கள் தான். முதற்கட்டமாக இவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் இன்று (25/04/2020) 6 நபர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இது குறித்து கிரணாட்டோ பிபிசி செய்தியாளர்களிடம் பேசிய போது “நான் இந்த காலத்தில் யாருக்கும் உதவாமல் இருப்பது போல் வெறுமையாக உணர்ந்தேன். ஆனால் இந்த ஆராய்ச்சிக்கு என்னால் இயன்றதை செய்வது பெரிய உதவி என்று நினைத்தேன்” என்று கூறியுள்ளார். இந்த ஆராய்ச்சிக்கு தலைமை பொறுப்பு வகித்திருக்கும் பேராசிரியர் சாரா கில்பெர்ட் கூறுகையில் ”நிச்சயம் இந்த தடுப்பு மருந்து வேலை ச்செய்யும் என்று எதிர்பார்க்கின்றோம். இந்த ஆராய்ச்சியில் 1000க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தப்பட உள்ளனர். ஆக்ஸ்ஃபோர்ட், சௌத்தாம்ப்டன், லண்டன் மற்றும் பிரிஸ்டோல் ஆகிய இடங்களில் அடுத்த வாரங்களில் தடுப்பூசி அளிக்கும் பணி தீவிரமடையும்” என்று கூறியுள்ளார். இந்த ஆராய்ச்சிக்காக இங்கிலாந்து அரசு, ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சி குழுவிற்கு 20 மில்லியன் யூரோக்களை நிதியாக வழங்கியுள்ளது.
மேலும் படிக்க : கடந்த 15 நாட்களில் புதிய கொரோனா தொற்று இல்லை – அசத்தும் புதுவை