Abhinandan Varthaman’s mannequin at Karachi museum : பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள விமானப்படை அருங்காட்சியகத்தில், இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் வர்தமான் சிறைபிடிக்கப்பட்டது போன்ற உருவ பொம்மையை, அந்நாட்டு அரசு வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள விமானப்படை அருங்காட்சியகத்தில், இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் வர்தமான் சிறைபிடிக்கப்பட்டது போன்ற உருவ பொம்மையை, அந்நாட்டு அரசு வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
Advertisment
இந்திய விமானப் படையின், 'விங் கமாண்டர்' அபிநந்தன் வர்தமான், பிப்ரவரியில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, 'மிக் - 22' ரக விமானத்தில் சென்றார். எதிர்பாராத விதமாக இவரது விமானம் தாக்குதலுக்கு ஆளானது. அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவம் வசம் சிக்கினார். இரு தரப்பு பேச்சு மற்றும் சர்வதேச நாடுகளின் தலையீட்டின் அடிப்படையில், 54 மணி நேரத்துக்கு பின், இந்திய ராணுவத்திடம், அபிநந்தனை, பாகிஸ்தான் அரசு ஒப்படைத்தது.
ஆபரேசன் ஸ்விப்ட் ரிடார்ட் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கேலரியில் அபிநந்தன் இந்திய விமானப் படை சீருடையுடன் நிற்பது போலவும், அவரை, பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் சிறை பிடித்திருப்பது போலவும், இரண்டு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த அருங்காட்சியகத்தில், அபிநந்தன் பயணம் செய்த மிக் 21 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. வாகா எல்லையில், அவர் இந்திய படைகளிடம் ஒப்படைக்கப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகளின் போட்டோக்களும் இடம்பெற்றுள்ளன.
எதிரிப்படையிடம் சிக்கிய போதும், எவ்வித ரகசியங்களையும் கூறாது, வீர மகனாய் இந்தியாவிற்கு திரும்பிய அபிநந்தன் வர்தமானை பாராட்டி, மத்திய அரசு, இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான வீர் சக்ரா விருதை கொடுத்து கவுரவித்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புலவாமா பகுதியில், தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், இந்திய ஜவான்கள் 40 பேர் பலியாயினர். அதற்கு பலிவாங்கும் பொருட்டு, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பல முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த நிகழ்வின்போதே, அபிநந்தன், பாகிஸ்தான் படையினரிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.