பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் (Pakistan Election 2018) முடிவுகளை எதிர்நோக்கி அந்நாட்டு மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். 272 தொகுதிகளைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 137 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம்.
இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் அவர்களின் கட்சியான் டெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி 119 இடங்களில் முன்னிலை வகித்துக் கொண்டிருப்பதாக இன்று காலை தகவல் வெளியானது.
ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரிப் அவரின் கட்சியான PML-N 65 இடங்களில் முன்னிலை வகித்து வந்தது. பாகிஸ்தான் மக்கள் கட்சி 44 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
To get the live update
காலையில் இருந்தே பரபரப்பாக இந்த தேர்தல் முடிவுகளுக்காக காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தகவல் ஒன்று வந்துள்ளது.
தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதால் தேர்தல் முடிவுகளை சரியான நேரத்தில் கூற இயலவில்லை என்று பாகிஸ்தானின் தலைமை தேர்தல் அதிகாரி முகமது ராஜா கான் குறிப்பிட்டிருக்கிறார்.
தற்போதைய கள நிலவரப்படி PTI-119, PML-N-65, PPP-44, Others-17 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இன்று மாலைக்குள் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பற்றிய முறையான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நடைபெற்ற போது குயெட்டா பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்று, அதில் 35 நபர்கள் இறந்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
/tamil-ie/media/media_files/uploads/2018/07/imrankhan5-759.jpg)
இம்ரானின் பிடிஐ கட்சிக்கு வலுவான ஆதரவினை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக வருவதற்கு இம்ரான் கானிற்கு ஆதரவு பெருகியுள்ளதையே இம்முடிவுகள் காட்டுகிறது.
புதிய பாகிஸ்தானை உருவாக்குவோம் என்பதே இவருடைய தேர்தல் பிரச்சாரத்தின் மிக முக்கிய வாக்குறுதியாக இருந்தது.
இவரின் வெற்றியினை கொண்டாடும் விதமாக இம்ரான் கானின் முன்னாள் மனைவி அவருக்கு ட்விட்டரில் மிகவும் நெகிழ்ச்சியான வாழ்த்துகளை பதிவு செய்திருக்கிறார்.
தேர்தல் முடிவுகள் இன்று மாலைக்குள் வெளியாகிவிடும் என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவிப்பு.