Pakistan FM alerts economic crisis world news today in Tamil: உலகம் முழுவதும் இன்று நடந்த முக்கிய, சுவாரஸ்யமான நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்.
ரஷ்ய விமர்சகர் சிறையிலிருந்து மாற்றம்
சிறையில் அடைக்கப்பட்ட கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னி தனது சிறைக் காலனியிலிருந்து மாற்றப்பட்டு அறியப்படாத இடத்திற்கு மாற்றப்பட்டதாக உயர்மட்ட உதவியாளர் ஒருவர் செவ்வாயன்று தெரிவித்தார்.
இலங்கை அமைச்சரவை ஒப்புதல்
பொருளாதார மீட்சியை எளிதாக்குவதற்கும் எரிசக்தி மற்றும் உணவு நெருக்கடியைத் தணிப்பதற்கும் நிறுவனங்களின் வருமானத்தின் அடிப்படையில் 2.5 சதவீத சமூக பங்களிப்பு வரியை விதிப்பது மற்றும் பெரும்பாலான பொதுத்துறை ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளை விடுமுறை தினங்களாகப் பிரகடனப்படுத்துவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியை நோக்கி பாகிஸ்தான்
பெட்ரோலிய பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்யாவிட்டால், இலங்கைப் போல் பாகிஸ்தானும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் நிதியமைச்சர் எச்சரித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: நுபுர் சர்மா கருத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; வெளிநாட்டவர்களை நாடு கடத்தும் குவைத்
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”பெட்ரோலிய பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்யும்படி சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்துகிறது. பெட்ரோல் லிட்டருக்கு 19 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 53 ரூபாயும் அரசு மானியம் வழங்குகிறது. இலங்கையும் இதேபோல் தான் பொதுமக்களுக்கு மானியம் வழங்கியது. தற்போது இலங்கை திவாலாகிவிட்டது.
பெட்ரோல், மின்சார விலையை உயர்த்தவில்லை என்றால் நாடு திவால் நிலைக்கு தள்ளப்படும். பெட்ரோலிய பொருட்கள் மீதான மானியத்தை ரத்து செய்து விலையை உயர்த்தவில்லையென்றால் நாணய சர்வதேச நிதியம் பாகிஸ்தானுக்கு நிதி உதவிகளை வழங்காது. இவ்வாறு நடைபெறும் பட்சத்தில் நாடு அழிவை நோக்கி செல்லும். கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று பிரதமரிடம் நான் கூறினேன்.
ஆனால், பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவதை பிரதமர் விரும்புகிறார். இலங்கை இன்று அதிக விலைக்கு எரிபொருளை வாங்குகிறது. மக்களுக்கு மருந்துப்பொருட்கள் வாங்கவும் அந்நாட்டில் பணம் இல்லை. பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தவில்லையென்றால் இலங்கையை பாகிஸ்தான் நிலைக்கு தள்ளப்படும்” என்று அவர் கூறினார்.
அமெரிக்காவில் ட்விட்டர் செயல்பாட்டில் சிக்கல்
அமெரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் டுவிட்டர் தளத்தில் சில பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதாக டுவிட்டர் பயனர்கள் பதிவு செய்தனர். எனினும், ஆண்டிராய்டு, ஆப்பிள் டுவிட்டர் ஆப் மூலம் உள்நுழைவதில் பிரச்சினை எழவில்லை. அதே நேரத்தில், இணையதளம் மூலம் டுவிட்டர் தளத்தில் லாக்-இன் செய்ய முடியவில்லை என்று சிலர் பதிவு செய்கிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.