Advertisment

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை 54, நவாஸ் ஷெரீப் 42 இடங்களில் முன்னிலை

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: இம்ரான் கானின் பி.டி.ஐ ஆதரவு சுயேட்சைகளுக்கு எதிராக நவாஸ் ஷெரீப் தலைமையிலான பி.எம்.எல்.-என் கட்சி முன்னிலையில் உள்ளது.

author-image
WebDesk
New Update
 Pakistan General Election 2024 Results Nawaz Sharif Bilawal bhutto zardari imran khan national assembly polls latest news in tamil

பாகிஸ்தான் முழுதுவம் முழுவதும் 90 ஆயிரத்து 582 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pakistan: பாகிஸ்தானில் மொத்தம் 336 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள 266 தொகுதிகளுக்கும் நேரடியாக மக்கள் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பாகிஸ்தானை பொறுத்தவரை முன்னாள் பிரதமர்களான இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Pakistan Election Results 2024 Live Updates

இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. அதேபோல் பஞ்சாப், சிந்து, கைபர் பக்துங்க்வா, பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. இதற்காக நாடு முழுவதும் 90 ஆயிரத்து 582 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதேபோல் தேர்தல் பாதுகாப்பு பணியில் சுமார் 65 ஆயிரம் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

இந்தநிலையில், நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. இதில், இம்ரான் கானின் பி.டி.ஐ கட்சியினர் அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதாக அக்கட்சியினர் கூறியுள்ளனர். 

பல இடங்களில் தேர்தல் முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்து இருப்பதாகவும் பி.டி.ஐ கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இம்ரான்கானின் பிடிஐ கட்சிக்கு பேட் சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதனால், இம்ரான் கான் கட்சியினர் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் 

பாகிஸ்தானின் தேர்தல் ஆணையம் இப்போது பாதிக்கும் மேற்பட்ட (136) தேசிய சட்டமன்றத் தொகுதிகளின் முடிவுகளை அறிவித்துள்ளது. அதன்படி, இம்ரான் கான் பி.டி.ஐ கட்சியின் சுயேட்சை வேட்பாளர்கள் 54 தொகுதிகளில் வெற்றி பெற்று தங்களது முன்னிலையை தக்கவைத்துள்ளனர்.

நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் 42 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. முன்னாள் பிரதமர்கள் மற்றும் சகோதரர்கள் நவாஸ் மற்றும் ஷேபாஸ் ஷெரீப் இருவரும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment