கராச்சியில் உள்ள பாகிஸ்தான் பங்குச் சந்தை கட்டிடத்தை தாக்க முயன்ற 4 துப்பாக்கிதாரிகளை பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில், நான் பாதுகாப்பு வீரர்கள், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் உள்பட 10 இறந்தனர். மேலும், இந்த சம்பவத்தில் 3 போலீசார் காயமடைந்துள்ளனர் என்று பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் தி டான் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் பாகிஸ்தான் பங்குச் சந்தை கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் ஒரு உயர் பாதுகாப்பு பகுதியாக உள்ளது. இங்கே பல தனியார் வங்கிகளின் தலைமை அலுவலகங்கள் உள்ளன. இன்று திடீரென வந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் வாகனத்தில் இருந்து வெளியே வந்ததும் கட்டிடத்துக்குள் நுழைவதற்கு முன்பு ஒரு கையெறி வெடிகுண்டை வீசினர். பின்னர், கட்டிடத்திற்கு வெளியே இருந்த ஒரு பாதுகாப்பு நிலை மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். உடனடியாக, பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தியதில் 4 துப்பாக்கிதாரிகளும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம், பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலில் கொல்லப்பட்ட துப்பாக்கிதாரிகளிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடி பொருட்கள் மற்றும் இதழ்கள் ஆகியவற்றைக் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில், 4 துப்பாக்கிதாரிகள், 4 பாதுகாப்பு வீரர்கள், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், பொதுமக்களில் ஒருவர் என 10 பேர் பலியாகி உள்ளனர்.
துப்பாக்கிதாரிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை வைத்து பார்க்கும்போது அவர்கள் ஒரு நீண்ட முற்றுகைக்கு தயார் நிலையில் வந்துள்ளதாகத் தெரிகிறது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
"நிலைமை இன்னும் பெரிதாகி வருகிறது என்றும் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன், பாதுகாப்பு நிர்வகிக்கப்பட்டு நிலைமை கட்டுப்படுத்துகிறது" என்று பாகிஸ்தான் பங்குச் சந்தை (பிஎஸ்எக்ஸ்) டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பங்குச் சந்தை கட்டிடம் மீதான இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் பெரிய அளவில் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக துபாக்கிதாரிகளுடன் துணிச்சலுடன் போராடிய வீரர்களைப் பற்றி நினைத்து நாடு பெருமைப்படுவதாக இம்ரான் கான் கூறியதாக ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.