பாகிஸ்தான் கர்தார்பூர் சாலை திறப்பு விழா - முன்னாள் பிரதமர் மன்மோகனுக்கு அழைப்பு
Manmohan singh : பாகிஸ்தானில் நடக்கவுள்ள புதிய சாலை துவக்க விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும் என அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகம்மது குரேஷி கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் நடக்கவுள்ள புதிய சாலை துவக்க விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும் என அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகம்மது குரேஷி கூறியுள்ளார்.
Advertisment
சீக்கிய மத குரு குருநானக் தேவின் சமாதியான கர்தார்பூர் சாஹிப், பாகிஸ்தானில் சர்வதேச எல்லையை ஒட்டி ராவி நதிக்கரையில் அமைந்து உள்ளது. இந்த சமாதிக்கு செல்வதை சீக்கியர்கள் புனிதமாக கருதுகின்றனர். பாகிஸ்தானில் உள்ள குருநானக் சமாதிக்கு சீக்கியர்கள் எளிதாக செல்லும் வகையில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தேரா பாபா நானக் நகரிலிருந்து சர்வதேச எல்லை வரை சிறப்பு பாதை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
کرتار پور راہداری ایک اہم منصوبہ ہے اور وزیر اعظم عمران خان کی اس میں ذاتی دلچسپی ہے چنانچہ پاکستان نے مشاورت کے بعد یہ فیصلہ کیا ہے کہ ہم اس کرتارپور راہداری کی افتتاحی تقریب میں ہندوستان کے سابق وزیر اعظم من موہن سنگھ کو اس میں مدعو کریں گے: وزیر خارجہ مخدوم شاہ محمود قریشی pic.twitter.com/PzHPFxi5uA
பாகிஸ்தான் எல்லையிலிருந்து கர்தார்பூர் வரை சாலை அமைக்க அந்நாடும் ஒப்பு கொண்டது. இந்த பணி முழுமையாக முடிந்து விட்டது. இதன் திறப்பு விழா நவம்பர் மாதம் 9ம் தேதி திறக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகம்மது குரேஷி நிருபர்களிடம் கூறியதாவது: இந்த விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படவுள்ளது. இவர் இந்தியர்கள் சார்பாகவும், சீக்கிய சமூகத்தினர் சார்பாகவும் அவர் பங்கேற்கவுள்ளார். 550வது குருநானக் தேவின் பிறந்த நாளில் சீக்கியர்கள் பலரும் இங்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
இந்தியாவிலிருந்து 5000 சீக்கியர்கள் இந்த பாதையில் விசா இல்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர். இந்த எண்ணிக்கை பின் 10 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.