scorecardresearch

3 போர்களுக்குப் பிறகு பாடம்; அமைதிப் பேச்சுக்கு மோடியை அழைக்கும் பாக். பிரதமர்

‘இந்தியாவுடன் 3 போர்களுக்குப் பிறகு நாங்கள் பாடம் கற்றுக்கொண்டோம் என்று கூறிய பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், பிரதமர் மோடியுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

3 போர்களுக்குப் பிறகு பாடம்; அமைதிப் பேச்சுக்கு மோடியை அழைக்கும் பாக். பிரதமர்

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், “இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது செய்தி அமர்ந்து பேசுவோம், நம்முடைய எல்லா பிரச்சினைகளையும் மேசைக்குக் கொண்டு வருவோம், காஷ்மீர் போன்ற பற்றி எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம்” என்று கூறினார்.

காஷ்மீர் உள்ளிட்ட பற்றி எரியும் பிரச்சனைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆழமான மற்றும் நேர்மையான பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்துள்ளார்.

துபாயில் இருந்து செயல்படும் அல்-அரேபியா செய்தி தொலைக்காட்சிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அளித்த பேட்டியில், “இந்தியா நெருக்கமான சகோதர நாடு, நாங்கள் எப்போதும் சகோதர உறவுகளைப் பகிர்ந்து கொள்கிறோம். அது தனித்துவமானது. இந்தியாவுடன் மூன்று போர்களைச் செய்தோம், அந்தப் போர்களின் விளைவாக ஏற்பட்ட துன்பம், வேலையின்மை, வறுமை ஆகியவற்றால் பாகிஸ்தான் பாடங்களைக் கற்றுக்கொண்டது. எங்களின் பிரச்சினைகளை தீர்க்கப்பட்டால் இந்தியாவுடன் அமைதியாக வாழ விரும்புகிறோம்.” என்று கூறினார்.

மேலும், “அமைதியாக வாழ்வதும், முன்னேறுவதும் அல்லது ஒருவருக்கொருவர் சண்டையிடுவதும், நேரத்தையும் வளங்களையும் வீணாக்குவதும் நம் கையில்தான் உள்ளது. வறுமையை ஒழிக்கவும், வளத்தை அடையவும், கல்வி, சுகாதார வசதிகள் மற்றும் வேலைவாய்ப்பை எங்களுடைய மக்களுக்கு வழங்கவும், எங்கள் வளங்களை வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகளுக்காக வீணாக்காமல் இருக்கவும் நாங்கள் விரும்புகிறோம், இதுவே பிரதமர் மோடிக்கு நான் சொல்ல விரும்புகிறேன்.” என்று ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானை பேச்சுவார்த்தைக்கு கொண்டு வருவதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைமை முக்கிய பங்காற்ற முடியும் என்று பரிந்துரைத்த அவர், “இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது செய்தி – அமர்ந்து பேசுவோம், காஷ்மீர் போன்ற பற்றி எரியும் பிரச்சனைகள் நம்முடைய எல்லா பிரச்சினைகளையும் மேசைக்கு கொண்டு வந்து தீர்வு காண்போம்.” என்று ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

சட்டப்பிரிவு 370 என்ற பெயரில் இந்தியாவில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதாக பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை ஷேபாஸ் ஷெரீப் மீண்டும் மீண்டும் கூறினார். பேச்சுவார்த்தை மற்றும் அமைதிக்கு நாங்கள் தயாராக உள்ளோம் என ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: Pakistan pm shehbaz sharif calls for peace talks with pm modi