Pakistan’s former premier accuses Imran Khan of receiving PKR 700 million for Senate seat : பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் எதிர்கட்சி தலைவருமான ஷாகித் ஹக்கான் அப்பாஸி, பிரதமர் இம்ரான் கான் பலூசிஸ்தானை சேர்ந்த வணிக அதிபர் ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக்க 700 மில்லியன் பாகிஸ்தான் ரூபாயை பெற்றார் என்று அவர் கூறினார்.
முகமது அப்துல் காதிர் மார்ச் மாதம் 3ம் தேதி செனட் வாக்கெடுப்பில் ஆளும் தெஹ்ரீக் - இ - இன்சாஃப் மற்றும் பிற கட்சிகளிடம் இருந்து வாக்குகளை பெற்றார். கானின் கட்டளையை ஏற்றே அக்கட்சி உறுப்பினர்கள் காதிரை தேர்வு செய்தனர் என்று அப்பாஸி கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு கான் பதில் அளிக்க வேண்டும் என்று அப்பாஸி புதன்கிழமை கூறியுள்ளார். ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட பணம் பெற்றுக் கொண்டு தான் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது என்று கூறியுள்ளனர்.
மேலும் படிக்க : மேகன் - ஹாரி குற்றச்சாட்டு; பக்கிங்காம் அரண்மனையின் கருத்து என்ன?
தொழில் அதிபருக்கு சீட்டு கொடுத்தது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். காதிர் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு, கான் அவரை பி.டி.ஐ. கட்சிக்கு வரவேற்றார். இதனை பலுசிஸ்தானில் இருக்கும் அக்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பையும் மீறி கான் மேற்கொண்டார் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
முன்னாள் அரசியல்வாதிகளுக்கும் இவர்களுக்கும் ஊழல் விவகாரத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் நீதிமன்றங்களும், ஊழலுக்கு எதிரான ஸ்தாபனங்களும் இதற்கு எதிராக எதுவும் பேசவில்லை. அமைதியாக உள்ளனர் என்று கூறியுள்ளார். இது போன்ற வழக்குகளில் நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு தொடுக்க வேண்டும். இதற்கு முன்பு நவாஸ் ஷெரிஃப் அவ்வாறு தான் நீக்கப்பட்டார். மக்களுக்கு இங்கே என்ன நடக்கிறது என்பது நன்றாகவே தெரியும் என்று குறிப்பிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil