பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பின் அந்தரங்கத்தில் தொங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை இளைஞர் ஒருவர் துடிப்புடன் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்பைடர் மேன் என்ற கதாபாத்திரம் திரைப்படங்களில் மட்டுமே பார்த்து இருப்போம். நிஜத்தில் பிரச்சனைகளில் மாற்றிக் கொள்ளும் பொதுமக்களை காப்பாற்ற ஸ்பைடர்மேன் நேரில் வருவாரா? என்றால் அது சாத்தியமில்லை.ஆனால் பிரான்சில் அரங்கேறிய சம்பவம் ஒன்று நிஜத்திலும் ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்ற ஸ்பைடர்மேன் வந்தால் இப்படி தான் இருக்குமா? என்பதை உணரவைத்துள்ளது.
பிரான்சின் பிரதான சாலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 4 ஆவது மாடியில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் ஒருவன் தவறுதலாக வழுக்கி அந்தரங்கத்தில் தொங்கிக் கொண்டிருந்தான். அவனது குரலை கேட்டு ஓடி வந்த பெற்றோர்கள் செய்வதறியாமல் திகைத்தனர்.
சிறுவனில் ஒருபக்க கையை அவனது பெற்றோர்கள் பிடித்திருக்க மற்றொரு கை, கால்கள் பிடிமானம் இன்றி தொங்கிக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் தான் அந்த சாலையின் வழியே சென்ற இளைஞர் ஒருவர் ஸ்பைடர் மேன் போல் செயல்பட்டு கிடு கிடு வென 4 ஆவது மாடிக்கு ஏறிச் சென்று சிறுவனின் உயிரை காப்பாற்றினார்.
இந்த சம்பவத்தை கீழே இருந்தப்படி பலரும் தங்களது மொபைல் ஃபோனில் படம் பிடித்தனர். சிறுவனின் உயிரை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மேலும் இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.