4 வயது சிறுவனை காப்பாற்ற நிஜ ஸ்பைடர் மேனாக மாறிய இளைஞருக்கு இப்படி ஒரு கவுரவமா?

ஆபத்தில் இருக்கும் மக்களை காப்பாற்ற வரும் சூப்பர் ஹீரோ போல் பொதுமக்கள் கசாமாவை பார்த்தனர்.

பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பின் அந்தரங்கத்தில் தொங்கிக் கொண்டிருந்த சிறுவனை காப்பாற்ற நிஜ ஸ்பைடர் மேன் போல் வந்த இளைஞருக்கு அந்நாட்டு அரசு மிகப்பெரிய கவுரவத்தை தந்துள்ளது.

நிஜ ஸ்பைடர் மேன் நேரில் வந்தால் எப்படி இருக்கும்? என்றும் கேட்கும் குழந்தைகளுக்கு இப்படி தான் இருக்கும் என்று நேரில் பார்க்க வைத்த இளைஞர் தான் மமோதோ கசாமா. மாலி நாட்டை சேர்ந்த 22 வயது இளைஞரான இவர், வருங்காலங்களில் பிரான்ஸில் ஆபத்தில் சிக்கி தவிக்கும் அனைவரையும் காப்பாற்ற தயாராகியுள்ளார்.

கடந்த மாதம் தேசிய ஊடங்களிலும் இவர் செய்த செயல் பிரேக்கிங் நியூஸாக ஒளிப்பரப்பப்பட்டது. அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த சிறுவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று தாய், தந்தையர் ஒருபக்கம் போராடி கொண்டிருந்தனர். அதை கீழே இருந்தப்படி பார்த்துக் கொண்டிருந்த மக்கள் எல்லாரும் உதவி.. உதவி.. காப்பாற்றுங்கள் என்று கத்திக் கொண்டிருந்தனர்.

அவனது குரலை கேட்டு ஓடி வந்த பெற்றோர்கள் செய்வதறியாமல் திகைத்தனர்.

அப்போது தான் கண் இமைக்கும் நேரத்தில் புயல் போல் வந்த இளைஞர் கசாமா கிடுகிடுவென கட்டிடத்தின் மீது ஏறி 4 வயது சிறுவனை அசால்ட்டாக காப்பாற்றினார். அடுத்த நாளே பிரான்ஸ் நாடு முழுவதும் நிஜ ஸ்பைடர் மேனானர் மமோதோ கசாமா. ஆபத்தில் இருக்கும் மக்களை காப்பாற்ற வரும் சூப்பர் ஹீரோ போல் பொதுமக்கள் கசாமாவை பார்த்தனர்.

பலர் இந்த நிகழ்வை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களிலும் வெளியிட்டனர். அப்படி ஒரு நாள் அந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பார்த்த
இதைப் பார்த்த பிரான்ஸ் அதிபர் இம்மனுவேல் மேக்ரான், அந்த இளைஞரை நேரில் அழைத்து மனதார பாராட்டினார். கூடிய விரைவில் பிரான்ஸ் நாட்டின் குடியுரிமையும் அவருக்கு வழங்குவதாக உறுதி அளித்தார்.

இந்நிலையில், அடுத்த நிகழ்வாக பிரான்ஸ் நாட்டு தீயணைப்பு துறை பிரிவில், மமோதோ கசாமாவிற்கு வேலை வழங்கி கெளரவித்துள்ளது அந்நாட்டு அரசு. இந்த செய்தியை பிரான்ஸ் தீயணைப்பு துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் தளங்களில் மாட்டிக் கொள்ளும் மக்களை எப்படி காப்பாற்றுவது, உயரமான கட்டிடங்களில் எப்படி ஏறுவது? என கசாமா தான் அங்கிருக்கும் பலருக்கும் கற்று தர போகிறாராம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close