அமெரிக்காவில் 10 வருடங்கள் முன்பு காணாமல் போன செல்லப் பிராணியான நாயை, மைக்ரோ சிப் உதவி மூலம் கண்டுப்பிடித்த நெகிழ்ச்சி சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய், பூனை, கிளி, முயல், பறவைகள் என அனைத்து விலங்கினங்களும் அவர்களின் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் போலவே பார்க்கப்படுவது வழக்கம். மனிதர்களின் வாழ்வில் வளர்ப்பு பிராணிகள் ஒரு அங்கமாகிவிட்டன. நமது குடும்பத்தில் உள்ள எவரேனும், காணாமல் போனாலோ அல்லது தவறி போனாலோ எப்படி துன்பப்படுவோமோ அதை விட அதிகமாகவே செல்லப்பிராணிகளின் பிரிவு நம்மை வறுத்தப்பட வைக்கிறது.
அந்த வகையில், அமெரிக்காவில் உள்ள குடும்பம், தங்களின் செல்லப்பிராணி நாயை சுமார் 10 வருடங்கள் முன்பு தொலைத்து விட்டு, மைக்ரோ சிப் மூலம் தற்போது கண்டிப்பிடித்ததை நெகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அபி என்றும் அழைக்கப்படும் அந்த நாயை 10 வருடங்களுக்கு முன்பு வாக்கிங் செல்ல அழைத்து சென்ற போது, குடும்பத்தில் இருந்த சிறுவன் நாயை தொலைத்துள்ளான். இருப்பினும், நாயின் உடலில் பொருத்தப்பட்டிருந்த சிப் மூலம் அது இருக்கும் இடத்தை கண்டுப்பிடிக்கும் முயற்சித்துள்ளனர்.
ஆனாலும், நாய் இருக்கும் இடம் கண்டுப்பிடிக்க முடியவில்லை. இதனால் மிகவும் வருத்தம் அடைந்த அந்த குடும்பம் பல்வேறு வழிகளில் நாயை தேட முயற்சித்துள்ளனர். நாயின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத குடும்பத்தில் இருக்கும் வயதான பெண்மனி உடல் நலக்குறைவால் பாதிப்படைந்துள்ளார். இந்நிலையில், மீண்டும் தொலைந்த நாயை கண்டுப்பிடிக்க முயற்சி செய்த குடும்பத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. 2 வயதில் தொலைந்து போன அபி, அவர்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் இருப்பதாக சிப்பில் தகவல் வந்துள்ளது.
இதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த அந்த குடும்பம், விரைந்து சென்று அந்த பகுதி முழுவது தேடியுள்ளது. அப்போது, 2 வயதில் தொலைந்து போன் அபி, 12 வயதில் அழகாக வளர்ந்து நின்றுள்ளது. தனது முன்னாள் வளர்ப்பு வீட்டாரை பார்த்த அந்த நாய், மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து ஒடி வந்துள்ளது. இந்த நெகிழ்ச்சி பதிவை அந்த குடும்பத்தினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.