Advertisment

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம், பங்கேற்ற பிரிட்டிஷ் தூதர் கைது

உக்ரேனிய பயணிகள் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தினோம் என்று ஈரானிய அரசு ஒப்புக்கொண்டதை அடுத்து, அரசின் செயல்பாடுகளை கண்டித்து ஈரான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
anti government demonstration at tehran, British ambassador arrested

anti government demonstration at tehran, British ambassador arrested

Anti government demonstration at tehran, British ambassador arrested : உக்ரேனிய பயணிகள் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தினோம் என்று ஈரானிய அரசு ஒப்புக்கொண்டதை அடுத்து, அரசின் செயல்பாடுகளை கண்டித்து ஈரான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

கோயம்பேடு திணறுகிறது: பொங்கல் பண்டிகையின் போது நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்..

ஈரானிய இராணு அறிக்கையில், விமானம் புரட்சிகர காவல்படை தளத்திற்கு அருகில் வந்தபோது மனித பிழையின் காரணமாக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று தெரிவித்து இருந்தது. பேரழிவிற்கு மன்னிப்பு கோரியதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளை தடுக்க அதன் ராணுவ அமைப்புகளை மேம்படுத்தப்போவதாகவும் கூறியது.

தான் ஒரு வசூல் ’மன்னன்’ என்பதை மீண்டும் நிரூபித்த ரஜினி!

உயிரிழந்தவர்களில் 82 பேர் இரான் நாட்டவர்கள்,   63 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள், நான்கு பேர்கள் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இதன் தொடர்ச்கியாக டெஹ்ரானில் இருக்கும் பல்கலைக்கழகங்களின் முன்பு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுக்கு எதிராகவும், அயதுல்லா அலி கமேனிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பி வருகின்றன. இந்த போரரட்டம் மிகவும் ஆக்கப்பூர்வமானது என்றும், அமெரிக்காவின் ஆதரவு ஈரான் நாட்டு மக்களுக்கு உண்டு என்றும் ட்ரம்ப் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஈரானுக்கான பிரிட்டிஷ் தூதர் ராப் மெக்கெய்ர்  ஈரானிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு விடிவிக்கப்பட்டார்.

 

publive-image மைக்கேல் ஆர்.பாம்பியோ=- அமெரிக்கா அரசு செயலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில்

 

ராப் மெக்கெய்ர் பல்கலைக்கழகத்தில் விமானத்தில் இறந்தவர்களுக்கான அனுதாப  கூடத்தில் கலந்து கொண்டதாகவும், பின் அது எதிர்பாராத விதமாக அரசு ஏதிர்ப்பு போராட்டமாக மாறியது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராப் மெக்கெய்ர் கைது செய்யப்பட்டதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்ததையடுத்து, ஈரானிய எட்டெமட் செய்தித்தாள், அவரின் புகை படத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டது.

இந்த செயலுக்கு பிரிட்டிஷ் வெளிநாட்டு தூதரகம் கடுமையாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. எந்த அடிப்படை ஆதாரமும், தேவையும் இல்லாமல் தன்நாட்டு தூதர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் பிரதமர்  போரிஸ் ஜான்சன் "நான்கு பிரிட்டிஷ் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தேவையான நீதியை பெற்றுத் தர அனைத்து நடவடிக்கையும் நாங்கள் எடுப்போம் "  என்று தெரிவித்தார். "ஒரு விரிவான, வெளிப்படையான சர்வதேச விசாரணை தேவை என்று வலியுறித்திய ஜான்சன்,  இறந்தவர்களின் உடல்கள் சொந்த நாடுகளுக்கு  திருப்பி அனுப்புவது தொடர்பாக   கனடா, உக்ரைன் மற்றும் பிற சர்வதேச நாடுகளுடன் இங்கிலாந்து நெருக்கமாக செயல்படும் என்று கூறினார்.

 

England Iran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment