Advertisment

”வோட்காவை குடிங்க... கொரோனாவ வெரட்டுங்க” - பொறுப்பான அதிபர்னா இவரு தான்!

ஐரோப்பாவின் கடைசி கொடுங்கோல் ஆட்சியாளர் இவர் தான் என்று ஊருக்குள் பேச்சு... 25 வருடங்களாக இவர் தான் அந்நாட்டின் அதிபராம்.

author-image
WebDesk
New Update
People could avoid corona by drinking vodka says Belarusian President Alexander Lukashenko

People could avoid corona by drinking vodka says Belarusian President Alexander Lukashenko : ஐரோப்பாவின் கடைசி கொடுங்கோல் ஆட்சியாளர் என்று அனைவராலும் அழைக்கப்படும் பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ (Alexander Lukashenko) கொரோனா வைரஸ் சிகிச்சை குறித்து சர்ச்சையான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். செவ்வாய் கிழமையன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது என்றும் தற்போது அதில் இருந்து முழுமையாக விடுதலை அடைந்துவிட்டேன் என்றும் கூறியுள்ளார்.

Advertisment

மேலும் கொரோனா வைரஸை கொல்லும் நோய் என்று கூறுவதை பைத்தியக்காரம் தனம் என்று கூறும் அவர் வோட்காவை குடித்தால் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்கலாம் என்றும் தன் நாட்டு மக்களிடம் கூறியுள்ளார்.

25 ஆண்டுகளாக அந்நாட்டின் அதிபராக இருக்கும் அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ அவர் வருகின்ற 8ம் தேதி அன்று அதிபர் தேர்தலை சந்திக்கிறார். தேர்தலில் அவருக்கு எதிராக போட்டியிட்ட நபர்களை சிறைபிடித்து, தேர்தலில் போட்டியிடவும் அனுமதி மறுத்துள்ளார் என்பதால் அவர் மீது மக்கள் கடுங்கோபத்துடன் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment