பழிவாங்கும் நடவடிக்கை : மரண தண்டனை குறித்து முஷாரப் கருத்து
Pakistan ex president Pervez Musharraf : தேச துரோக வழக்கில் தனக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருப்பது பழிவாங்கும் நடவடிக்கை என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஷ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
தேச துரோக வழக்கில் தனக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருப்பது பழிவாங்கும் நடவடிக்கை என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஷ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
Advertisment
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், தற்போது துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முஷாரப்பிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் முதல்முறையாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்...
முஷாரப் பேசியதாக அவர் சார்ந்த கட்சியினர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் இக்கட்டான தருணத்தில் எனக்கு ஆதரவாக இருந்த மக்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு எதிரான தீர்ப்பில் முறையாக வாதிட எனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இது வருத்தம் தரக்கூடியது. நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு. மேல்முறையீட்டில் நான் வெற்றி பெறுவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக 2014 முதல் 2019 வரை விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த விசாரணையில் எனது தரப்பு வாதத்தை வைக்க அனுமதிக்கப்படவில்லை. பின் உடல்நிலை காரணமாக நான் துபாய் வந்துவிட்டேன். சிறப்பு நீதிமன்றம் தமக்கு வழங்கியுள்ள தீர்ப்பு, கேள்விக்குரியதாக உள்ளது. பாகிஸ்தான் அரசியலமைப்பின் மாண்பு, இந்த தீர்ப்பில் மீறப்பட்டுள்ளது.
என்னை மட்டும் குறிவைத்து, எதிராக செயல்பட்டுவரும் சிலர் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தீர்ப்பு உள்ளது. எனக்கு எதிராக உள்ள சிலர் பெரிய பதவிகளில் உள்ளதால், அவர்கள் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இந்த செயலை செய்துள்ளனர்.
எனது வழக்கறிஞர்கள், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளனர். இதில் நிச்சயம் நான் வெற்றி பெறுவேன் என்று கூறியுள்ளார்.
முஷாரப்பிற்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தானின் பலபகுதிகளில் முஷாரப் ஆதரவாளர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த போராட்டங்கள் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலையாமல் தடுக்கும்நடவடிக்கைகளில் இம்ரான் கான் அரசு ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.