Advertisment

இறப்பு அபாயத்தை குறைக்கும் பைசர் மாத்திரைகள்... 90 நாடுகளுடன் பேச்சுவார்த்தை

பைசர் நிறுவனம் அதன் கொரோனா மாத்திரைக்கான விநியோக ஒப்பந்தங்கள் குறித்து 90 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

author-image
WebDesk
New Update
இறப்பு அபாயத்தை குறைக்கும் பைசர் மாத்திரைகள்... 90 நாடுகளுடன் பேச்சுவார்த்தை

அமெரிக்காவின் பைசர் நிறுவனம் கண்டுபிடித்துள்ள ஆண்டிவைரஸ் மாத்திரை, கொரோனாவால் ஏற்படும் இறப்பு அபாயத்தை 89 சதவீதம் வரை குறைக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் தங்களது புதிய ஆயுதத்தை உலகம் முழுவதும் விரைவில் கிடைக்க வகையில் செய்வோம் என பைசர் நிறுவன சிஇஓ உறுதியளித்துள்ளார்.

Advertisment

பைசர் மாத்திரையின் சோதனை முடிவுகளை ஆராய்ந்ததில், பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ள மமெர்க் மற்றும் ரிட்ஜ்பேட் நிறுவனத்தின் மோல்நுபிராவிர் மாத்திரைகளை விட அதிக அளவு தசெயல் திறன் கொண்டது என்பது உறுதியாகியுள்ளது.

ஃபைஸரின் மாத்திரைக்கு பேக்ஸ்லோவிட் ( Paxlovid) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனை மூன்று மாத்திரைகள் வீதம் தினமும் இரண்டு வேளை வழங்க வேண்டும்.

இந்த மாத்திரையின் இடைக்கால பரிசோதனை தரவுகளை அமெரிக்காவின் உணவு மற்றும் மருத்து கட்டுப்பாட்டு நிர்வாக அமைப்பிடம் விரைவில் சமர்ப்பிக்க பைசர் திட்டமிட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் நிச்சயம் அவசர கால உபயோகத்துக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பைசர் நிறுவனம் அதன் கொரோனா மாத்திரைக்கான விநியோக ஒப்பந்தங்கள் குறித்து 90 நாடுகளுடன் ஆலோசித்து வருவதாக அதன் சிஇஓ ஆல்பர்ட் போர்லா நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.

இதனால் ஃபைஸர் நிறுவனப் பங்குகளில் விலை அமெரிக்கச் சந்தையில் 11% அதிகரித்தது. அதேவேளையில் மெர்க் அண்ட் கோ நிறுவனத்தின் பங்குகளின் விலை 10% சரிந்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் பைடன், " அமெரிக்காவின் உணவு மற்றும் மருத்து கட்டுப்பாட்டு நிர்வாகம் விரைவில் அனுமதிக்கக்கூடும் என எதிர்பார்க்கிறோம். நாட்டு குடிமக்களுக்காக மில்லியன் கணக்கான பைசர் மாத்திரைகளை அரசாங்கம் பாதுகாத்து வைத்திருக்கிறது. கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் சிகிச்சை முறையில், இது மற்றொரு முறையாக இருக்கும் என தெரிவித்தார்.

முன்னதாக நேற்று, உலகின் முதல் கரோனா மாத்திரைக்குப் பிரிட்டன் அரசு அனுமதியளித்துள்ளது. இந்த மாத்திரைக்கு மால்னுபிராவிர் (molnupiravir) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு பிரிட்டனின், மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களுக்கான ஒழுங்குமுறை ஆணையம் அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

ஆனால், பைசரின் மாத்திரை அதை விட திறன் அதிகம் கொண்டது என்பது உறுதியானது, மால்னுபிராவிர் மாத்திரைக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி என பரலவாக பேசப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை முறையில் மாத்திரை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இரண்டு கொரோனா மாத்திரைகள் வந்துள்ளதால், தடுப்பூசிக்கு குட் பாய் சொல்லிவிட்டு மாத்திரை பக்கம் மக்கள் மாறுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus Corona Vaccine Pfizer
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment