உலக டாப் பணக்காரர்களுள் ஒருவரான மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்றில் பர்கர் வாங்குவதற்காக வரிசையில் நிற்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
மைக்ரோசாஃபட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ் பற்றி நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உலகின் முதன்மையான பணக்காரர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். எப்போதும் எளிமையை விரும்பும் பில்கேட்ஸின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் சிலிக்கன் வேலி பகுதியில் உள்ள டிக்ஸ் டிரைவ்-இன் எனும் உணவகத்தில் 1,00,000,000,000 டாலர்கள் சொத்து கொண்டிருக்கும், உலகின் மிகப்பெரிய அறக்கட்டளை நடத்திக் கொண்டிருக்கும் பில்கேட்ஸ் பர்கர், ஃப்ரைஸ் மற்றும் கோகோ வாங்க வரிசையில் நின்றுக்கொண்டு இருக்கிறார்.
உலகின் டாப் கோடீஸ்வரர் தனது வேலைப் பளுவுக்கு இடையே, வரிசையில் நின்று உணவு வாங்கும் போது, நாமெல்லாம் எம்மாத்திரம்!.