குடையுடன் அமெரிக்காவில் தரையிறங்கிய மோடி… இன்று குளோபல் சி.இ.ஓ.-க்களுடன் சந்திப்பு!

2014-ல் பதவியேற்ற பிறகு 7-வது முறையாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்காவுடனான வியூக ரீதியான கூட்டணி இப்பயணத்தின் மூலம் வலுப்படுத்தப்படும். ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளுடனான உறவு மேலும் மேம்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில், குவாட் உச்ச மாநாட்டில் கலந்துகொள்ளப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் சுற்று பயணமாக, நேற்று டெல்லியிலிருந்து விவிஐபி-களுக்கான ஏர் இந்தியா ஒன் விமானம் மூலம் புறப்பட்டார். அமெரிக்கா சென்றுள்ளார்.
2014-ல் பதவியேற்ற பிறகு 7-வது முறையாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். அமெரிக்க பயணம் குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்காவுடனான வியூக ரீதியானகூட்டணி இப்பயணத்தின் மூலம் வலுப்படுத்தப்படும். ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளுடனானஉறவு மேலும் மேம்படுத்தப்படும்” என்று கூறியிருந்தார்.


இன்று காலை, வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படைத்தளத்தில் பிரதமர் மோடியை அமெரிக்க அரசு உயரதிகாரிகளும் இந்திய தூதர் தரண்ஜித் சிங் சாந்துவும் வரவேற்றனர். 
விமான நிலையத்திற்கு வெளியே திரண்டிருந்த ஏராளமான அமெரிக்க வாழ் இந்தியர்கள் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். அவர்களுடன் மோடி கைகுலுக்கி மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டார்.
வாஷிங்டன் சென்றடைந்தபோது மழை தூறியதால், பிரதமர் குடை பிடித்தபடி விமானத்திலிருந்து இறங்கினார்.

நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “வாஷிங்டன் வந்தடைந்துவிட்டேன.  இரண்டு நாள்களில் ஜோ பைடன், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன், ஜப்பான் பிரதமர் சுகா ஆகியோரைச் சந்திக்கிறேன்.மேலும், நாற்கர கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்கிறேன். முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அலுவலர்களுடன் இந்தியாவின் பொருளாதார வாய்ப்புகள் குறித்து கலந்துரையாட உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது மற்றொரு ட்வீட்டில், “அன்பான வரவேற்பு அளித்த வாஷிங்டனில் உள்ள இந்திய சமூகத்திற்கு மிக்க நன்றி. புலம்பெயர்ந்தோர் எங்களது பலம். உலகெங்கிலும் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோரின் சிறப்பான செயல்பாடு பாராட்டத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார் .


சுற்றுப்பயணத்தின் முதல் நாள்
முதல் நாளான இன்று, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.


கமலா ஹாரிஸ், துணை ஜனாதிபதியான பின்னர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு மோடி பேசி இருந்தாலும், இரு தலைவர்களும் நேரில் சந்தித்து பேசுவது இதுவே முதல் முறை.
அடுத்த நாள், செப்டம்பர் 24 ஆம் தேதி, அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு, பிரமதர் மோடி முதன்முறையாகச் சந்திக்கிறார். இதற்கு முன்பு, பல முறை காணொலி வாயிலாக இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர்.


தொடர்ச்சியாக இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பான குவாட் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்கிறார். இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் சந்தித்து பேச உள்ளனர்.


சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக, பிரதமர் மோடி 25ஆம் தேதி ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் 76-வது அமர்வில் கலந்துகொண்டு பேசுகிறார். அப்போது, பயங்கரவாதம், கொரோனா, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட சர்வதேச பிரச்னைகள் குறித்து ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pm modi arrives in us to attend quad leaders summit

Next Story
புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – இலங்கை அதிபர்Gotabaya Rajapaksa
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com