ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது அந்நாட்டின் ஹேண்ட்லோவாவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் கோழைத்தனமான மற்றும் கொடூரமான செயல் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
மோடி தனது X பக்கத்தில், "இந்த கோழைத்தனமான மற்றும் கொடூரமான செயலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். பிரதமர் ஃபிகோ விரைவில் குணமடைய வேண்டுகிறேன். ஸ்லோவாக்கிய குடியரசின் மக்களுடன் இந்தியா துணை நிற்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
நேற்று (புதன்கிழமை) அமைச்சரவைக் கூட்டத்தை முடித்து ஸ்லோவாக் பிரதமர் திரும்பிய போது அவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 59 வயதான அவர் மீது 5 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் நிலைகுலைந்து போனார்.
தாக்குதலைத் தொடர்ந்து, போலீசார் அந்த பகுதியை சீல் வைத்தனர், மேலும் ஃபிகோ பான்ஸ்கா பைஸ்ட்ரிகாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/pm-modi-slovakia-prime-minister-robert-fico-shooting-9332098/
ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, ஃபிகோவின் உயிருக்கு தற்போது ஆபத்து இல்லை என்று கூறியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முக்கியமான ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு 3 வாரங்களுக்கு முன்னதாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது, அங்கு 27 நாடுகளைக் கொண்ட ஜனரஞ்சக மற்றும் கடுமையான வலதுசாரிக் கட்சிகள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபிகோ மீதான தாக்குதலுக்கு ஐரோப்பிய யூனியன் தலைவர் Ursula von der Leyen "கொடூரமான தாக்குதல்" என்று கூறி கண்டனம் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“