Advertisment

ஜப்பானில் ஷின்சோ அபேக்கு பிரதமர் மோடி மரியாதை… உலகச் செய்திகள்

ஷின்சோ அபேக்கு பிரதமர் மோடி மரியாதை; ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இலங்கை ஆதரவு; ஈரானில் தொடரும் பெண்கள் போராட்டம்; இத்தாலியில் முதல் பெண் பிரதமர்… இன்றைய உலகச் செய்திகள்

author-image
WebDesk
New Update
ஜப்பானில் ஷின்சோ அபேக்கு பிரதமர் மோடி மரியாதை… உலகச் செய்திகள்

இன்று உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்.

Advertisment

ஷின்சோ அபேக்கு பிரதமர் மோடி மரியாதை

கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு, 55 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த முதல் அரசு இறுதிச் சடங்கில் ஜப்பான் மலர்கள், பிரார்த்தனைகள் மற்றும் 19-துப்பாக்கி வணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தியது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காலை 10.30 மணிக்கு அரசு இறுதிச் சடங்கு தொடங்கியது, அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி உலகத் தலைவர்களுடன் அபேவுக்கு அஞ்சலி செலுத்தினார். முன்னதாக அபேயை "இந்தியாவின் நண்பன்" என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, பலிபீடத்தில் மரியாதை செலுத்தும் வகையில் வெள்ளை மலர்களால் சிறிய பூங்கொத்தை வைத்து வணங்கினார்.

இதையும் படியுங்கள்: இந்தியாவும் பாகிஸ்தானும் எங்கள் பார்ட்னர்கள் – அமெரிக்கா

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இலங்கை ஆதரவு

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் நிரந்தர உறுப்புரிமைக்கான முயற்சிக்கு தமது அரசாங்கம் ஆதரவளிக்கும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

publive-image

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி விக்கிரமசிங்க தற்போது ஜப்பான் சென்றுள்ளார்.

செவ்வாயன்று ஜப்பானிய வெளியுறவு மந்திரி யோஷிமாசா ஹயாஷி உடனான சந்திப்பின் போது, ரணில் ​​விக்கிரமசிங்க, "சர்வதேச அரங்கில் ஜப்பான் (இலங்கைக்கு) அளித்த ஆதரவை பாராட்டியதுடன், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாவதற்கான ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க தனது அரசாங்கத்தின் விருப்பத்தை வெளிப்படுத்தினார், ” என இலங்கை ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் தொடரும் பெண்கள் போராட்டம்

மஹ்சா அமினி என்ற இளம் பெண்,ஹிஜாப்பை சரியாக அணியாததற்காக ஈரானின் அறநெறி காவல்துறையால் கைது செய்யப்பட்டு காவலில் இருந்தப்போது உயிரிழந்தார்.

publive-image

இது ஈரான் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண்கள் ஹிஜாப்பை மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமினியின் மரணத்திற்குப் பிறகு எதிர்ப்புகள் வெடித்தபோது, ​​20 வயதான யாசி என்ற பெண் ஹிஜாபை நிராகரித்து தெருக்களில் இறங்கி போராடினார். இதுபோல் இன்னும் பலபெண்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இத்தாலியில் முதல் பெண் பிரதமர்

இத்தாலியின் தேசியத் தேர்தலில் நவ-பாசிச வேர்களைக் கொண்ட ஒரு கட்சி அதிக வாக்குகளைப் பெற்றது, இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நாட்டின் முதல் தீவிர வலதுசாரி தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு திங்களன்று களம் அமைத்தது. இதன்மூலம் இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜியோர்ஜியா மெலோனி தலைமையேற்கிறார்.

publive-image

ஐரோப்பா முழுவதிலும் உள்ள வலதுசாரித் தலைவர்கள், 45 வயதான மெலோனியின் வெற்றியை, பிரஸ்ஸல்ஸுக்கு ஒரு வரலாற்று, தேசியவாத செய்தியை அனுப்பியதாக உடனடியாகப் பாராட்டினர். இது ஸ்வீடனில் வலதுசாரி வெற்றியையும், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் தீவிர வலதுசாரிகளின் சமீபத்திய வெற்றிகளையும் தொடர்ந்து வந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Modi Japan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment