ஐ.நா.வில் இந்தியா ; இதுவரை எடுத்திராத புதுமுயற்சி பலனளிக்குமா?

PM Modi at UN : பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வரலாற்றில் இதுவரை எடுத்திராத புதுமுயற்சியை எடுத்துள்ளார். அது நிச்சயம் பயனளிக்கும்

Shubhajit Roy

அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வரலாற்றில் இதுவரை எடுத்திராத புதுமுயற்சியை எடுத்துள்ளார். அது நிச்சயம் பயனளிக்கும் என்று இந்தியாவிற்கான ஐ.நா.வின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பரூதீன் தெரிவித்துள்ளார்.

ஒருவார கால பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஹூஸ்டன் நிகழ்ச்சி, ஐ.நா. சபையில் உரை, சர்வதேச நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு சையத் அக்பரூதீன் சிறப்பு பேட்டிளித்துள்ளார்.

அவரது பேட்டியின் சிறப்பம்சங்கள்..

பிரதமர் மோடியின் இந்த பயணத்தில் ஏதாவது முக்கியத்துவம் உள்ளதா?

ஐ.நா.சபையில், இந்தியா இதுவரை இத்தகைய முயற்சியை எடுத்ததில்லை என்றே கூற வேண்டும். ஏனெனில், பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது 75 நாடுகளின் தலைவர்களை சந்தித்துப்பேச உள்ளார்.
பிரதமர் மோடி மட்டுமல்லாது, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் உள்ளிட்டோரும் சர்வதேச நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளனர்.
பிரதமர் மோடி 2014ம் ஆண்டு ஐ.நா. சபை கூட்டத்தில் உரையாற்றினார். அதற்கு பிறகு ஜி-4 மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டங்களில் மட்டுமே பங்கேற்றுள்ளார். இந்தமுறை, சர்வதேச நாடுகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கும் வழிமுறையை மனதில் கொண்டு இந்தியா, இந்த சுற்றுப்பயணத்தை வடிவமைத்துள்ளது. பிரதமர் மோடி, கடந்த ஆண்டுகளில் மேற்கொண்ட சுற்றுப்பயணங்களின் விளைவாக, இந்த அரியமுயற்சியை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுவருகிறார். இந்தியாவிற்கு ஜி-20, பிரிக்ஸ், கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் அண்டை நாடுகள் என எல்லாவற்றிலும் இனிய உறவு நீடித்துவருகிறது.
இந்த சுற்றுபப்பயணத்தில், இந்திய பிரதிநிதிகள் 14 கரீபியன் நாடுகள் மற்றும் பசிபிக் தீவு பகுதியை சேர்ந்த 12 நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளனர்.

ஐ.நா.வில் இந்தியாவின் அணுகுமுறை எத்தகையதாக இருக்கும்?

பேச்சுவார்த்தை என்பதை தாண்டி செயல்பாடு என்பதனடிப்படையிலேயே இந்தியாவின் அணுகுமுறை உருவாக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் குறித்து இதுவரை நிறைய பேசிவிட்டோம். இனி இந்தியா செயல்படும் என்பதற்கு சான்றாக, ஐக்கியநாடுகள் சபையில், இந்தியா தரப்பில் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டில் சூரியசக்தி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்தியா, இந்த விவகாரங்களில் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருப்பதையே விரும்புகிறது.

காஷ்மீர் விவகாரத்தை, பாகிஸ்தான் ஐ.நா.வில் எழுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளதே? இந்தியா அதை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது?

நவாஸ் ஷெரீப், பெனாசிர் புட்டோ, ஷா முகமது குரேஷி உள்ளிட்ட பாகிஸ்தான் தலைவர்கள், தங்கள் ஆட்சிக்காலங்களில் காஷ்மீர் விவகாரத்தில் செய்த தவறுகளையே, தற்போதைய பிரதமர் இம்ரான் கானும் செய்து கொண்டிருக்கிறார். அவர்கள் அதளபாதாளத்தில் சென்றுகொண்டிருக்கிறார்கள். நாம் உயர்ந்துகொண்டிருக்கிறோம். தீவிரவாதத்தை ஆதரித்து வந்த பாகிஸ்தான், தற்போது அருவருக்கத்தக்க விமர்சனங்களை ஆதரித்து வருகிறது.

சீனாவின் நிலை என்னவாக இருக்கும்?

ஐ.நா.வில் சீனாவின் அணுகுமுறை குறித்து தற்போதைக்கு எதுவும் தெரிவிக்க இயலாது. இந்திய- சீன நாடுகளுக்கிடையே உறவு மேம்படவே, அந்நாட்டின் தூதர் சமீபத்தில் தன்னை சந்தித்ததாக அவர் மேலும் கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close