அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பிரதமர் மோடி சந்திப்பு: தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை!

சந்திப்பின்போது, இந்த பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் உடன் இருந்தனர்.

சந்திப்பின்போது, இந்த பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் உடன் இருந்தனர்.

author-image
WebDesk
New Update
PM Modi In America

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, வாஷிங்டன், டி.சி.யில் நேற்று (பிப்ரவரி 13) அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸை சந்தித்து பேசினார். அதிபர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்புக்கு முன்னதாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

Read In English: PM Modi meets US NSA Michael Waltz in Washington

Advertisment

பிராண்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி. கடந்த பிப்ரவரி 12-ந் தேதி அந்த பயணத்தை நிறைவு செய்த நிலையில், நேற்று (பிப்ரவரி 113) அமெரிக்காவிற்கு வந்தடைந்தார். 2 நாள் பயணமாக அமெரிக்க வந்துள்ள பிரதமர் மோடி, அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்புடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்நிலையில், அதிபர் ட்ரம்பை சந்திக்கும் முன்பு, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மோடி தங்கியிருக்கும் பிளேர் ஹவுஸில் நேற்று நடைபெற்றது. மேலும் இந்த சந்திப்பின்போது, இந்த பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் உடன் இருந்தனர்.

வால்ட்ஸுடனான சந்திப்பின் ஒரு புகைப்படத்தை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, அவருடன்தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு குறித்து விவாதித்ததாகவும், அவரை 'இந்தியாவின் சிறந்த நண்பர்' என்றும் அழைத்ததாகவும் பதிவிட்டுள்ளார். மைக்கேல் வால்ட்ஸ் உடனான ஒரு சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. அவர் எப்போதும் இந்தியாவின் சிறந்த நண்பராக இருந்து வருகிறார். தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை இந்தியா-அமெரிக்க உறவுகளின் முக்கிய அம்சங்கள்.

Advertisment
Advertisements

மேலும் இந்த விஷயங்களைச் சுற்றி நாங்கள் ஒரு அற்புதமான விவாதத்தை நடத்தினோம். ஏ.ஐ தொழில்நுட்பம், செமி கண்டெக்டர், விண்வெளி மற்றும் பல துறைகளில் ஒத்துழைப்புக்கான வலுவான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதனையடுத்து பிரதமர் மோடி, இன்று பிற்பகுதியில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்புடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார். அதனைத் தொடர்ந்து, ஒரு கூட்டு செய்தி அறிக்கை மற்றும் அமெரிக்க ஜனாதிபதி நடத்தும் அரசு இரவு விருந்தில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபராக 2-வது முறையாக கடந்த மாதம் பதவியேற்ற டிரம்ப் பிரதமர் மோடியுடன் நடத்தும் முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.

உலகம் முழுவதும், வர்த்தகம் தொடர்பான பதட்டங்கள் அதிகரித்துள்ளது. இதனிடையே,  டிரம்ப் தனது "பரஸ்பர வரிகள்" கொள்கையை இரட்டிப்பாக்கியுள்ள நிலையில்,  இந்த சந்திப்பு நடைபெறுகிறது. முன்னதாக ட்ரூத் சோஷியலில் ஒரு ரகசிய பதிவில், தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் விதமாக பேசிய, அமெரிக்க ஜனாதிபதி, சாத்தியமான வர்த்தக பேச்சுவார்த்தைகளை ஒரு முக்கிய நிகழ்ச்சி நிரலாகக் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளை இந்தியாவும் அமெரிக்காவும் கையாளும் நிலையில், மோடியின் வருகை இருதரப்பு கூட்டாண்மையின் எதிர்காலத்திற்கான தொனியை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Pm Modi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: