உடல்நலம் தேறிய போப் ஃபிரான்சிஸ்: முதல் முறையாக போட்டோவை வெளியிட்ட வாட்டிகன்!

போப் பிரான்சிஸ் உடல் நலம் தேறிய நிலையில், தேவாலயத்தில் நடந்த திருப்பலி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்த புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டுள்ளது.

போப் பிரான்சிஸ் உடல் நலம் தேறிய நிலையில், தேவாலயத்தில் நடந்த திருப்பலி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்த புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
good health

வாடிகனின் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், 88, வயது முதுமை காரணமாக உடல் நலம் குன்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல்ரீதியாக பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார்.

Advertisment

கடந்த பிப்ரவரி 14ம் தேதியன்று ரோமில் உள்ள அகஸ்டினோ ஜெமெலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலில் அவர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரது உடல்நிலை முன்னேற்றம் கண்டு வருகிறது என்று மருத்துவர்கள் கூறினர்.

தற்போது போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறி உள்ளார். அவர் ஜெமெல்லி பாலிகிளினிக்கில் உள்ள தேவாலயத்தில் நடந்த திருப்பலி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட பிறகு, தற்போதுதான் முதல் படம் வெளியாகி உள்ளது. படத்தில் போப் பிரான்சிஸ், 'ஊதா நிற சால்வை அணிந்து தேவாலயத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். இந்த புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டுள்ளது.

Pope Francis

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: