சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸுக்கு, இரத்தம் ஏற்றப்பட்டதாக வாட்டிகன் சிட்டி தெரிவித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Pope Francis had ‘tranquil’ night in hospital following respiratory crisis, Vatican says
இது தொடர்பான ஒரு வரி அறிக்கையை வாட்டிகன் சிட்டி செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி அளித்துள்ளார். எனினும், காலை எழுந்து அவர் உணவு எடுத்துக் கொண்டாரா என அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
88 வதான போப்பிற்கு, அவர் இளம் வயதாக இருக்கும் போதே நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நிமோனியா மற்றும் நுரையீரல் தொற்றுக்கு அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று காலை அவருக்கு ஆஸ்துமா ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
செயற்கை சுவாசம் மூலமாக அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இரத்த தட்டை அணுக்கள் எண்ணிக்கை அவருக்கு குறைவாக இருந்தது கண்டறியப்பட்டதால், இரத்தம் ஏற்றும் பணியும் நடைபெற்றது.
பிரான்சிஸின் வயது, உடல் நிலை மற்றும் ஏற்கனவே இருக்கும் நுரையீரல் நோய் போன்றவற்றை கருத்திற்கொண்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இரத்த ஓட்டத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டால் செப்சிஸ் பாதிப்பு ஏற்படக் கூடும் என்று கூறப்படுகிறது.