போப் பிரான்சிஸ் அவர்களுக்கு சுவாச நோய்த்தொற்று உள்ளது, இதனால் மருத்துவமனையில் “சில நாட்கள்” சிகிச்சை பெற வேண்டியுள்ளது என்று வாட்டிகன் புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 86 வயதான போப்பின் உடல்நிலை கவலைக்கு மத்தியில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
கடந்த சில நாட்களாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து, போப் பிரான்சிஸ் ரோமின் ஜெமெல்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் அவருக்கு சுவாசத் தொற்று இருப்பது தெரியவந்தது, ஆனால் அவருக்கு கோவிட்-19 இல்லை.
“போப் பிரான்சிஸ் அவருக்கு பொதுமக்களிடம் இருந்து வந்த பல செய்திகளால் நெகிழ்ந்துள்ளார், மற்றும் பிரார்த்தனைக்கு தனது நன்றியைத் தெரிவிக்கிறார்” என்று வாட்டிகன் தெரிவித்துள்ளது.
போப் பிரான்சிஸ் சில சமயங்களில் மூச்சுத் திணறல் மற்றும் பொதுவாக சுவாச பிரச்சனைகளை சந்தித்து வருகிறார், அவரது 20 வயதுகளின் முற்பகுதியில் அவரது சொந்த நாடான அர்ஜென்டினாவில் பாதிரியாராக பயிற்சி பெற்று வந்தப்போது அவருக்கு ஒரு நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டுள்ளது.
அவரது தற்போதைய மருத்துவமனை அனுமதி என்பது ஏப்ரல் 2 ஆம் தேதி பாம் ஞாயிறு சேவைக்கு முன்னதாக வருகிறது, இது ஏப்ரல் 9 ஆம் தேதி ஈஸ்டர் ஞாயிறுக்கு வழிவகுக்கும் விழாக்களின் பரபரப்பான வாரத்தின் தொடக்கத்தைக் குறிப்பதாகும், போப் இந்த நிகழ்வுகளை வழக்கமாக வழிநடத்த முடியுமா என்று தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.
போப் பிரான்சிஸின் உடல்நிலை கடந்த இரண்டு ஆண்டுகளில் மோசமடைந்து வருகிறது, இந்தக் காலக்கட்டத்தில் அவருக்கு பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது மற்றும் ஒரு முழங்காலில் நாள்பட்ட வலி காரணமாக சக்கர நாற்காலி அல்லது வாக்கிங் ஸ்டிக்கைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
வழக்கமான பரிசோதனைக்காக போப் பிரான்சிஸ் புதன்கிழமை மருத்துவமனைக்குச் சென்றதாக வாட்டிகன் முதலில் கூறியது. ஆனால் கடைசி நிமிடத்தில் தொலைக்காட்சி நேர்காணலை ரத்து செய்துவிட்டு அவர் ஆம்புலன்சில் வந்ததாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. போப் பிரான்சிஸ் காலையில் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அவரது வாராந்திர பொது பார்வையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார், அப்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார்.
சுகாதார நிலைமைகள்
உலகின் ஏறக்குறைய 1.4 பில்லியன் ரோமன் கத்தோலிக்கர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் டைவர்டிகுலிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், இது பெருங்குடலைப் பாதிக்கலாம் அல்லது வீக்கம் ஏற்படுத்தலாம். மேலும் அவரது பெருங்குடலின் ஒரு பகுதியை அகற்ற 2021 இல் ஜெமெல்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஜனவரி மாதம், இந்தப் பிரச்சனை திரும்ப வந்ததாகவும், அது அவரது எடையை அதிகரிக்கச் செய்ததாகவும், ஆனால் அவர் அதிகம் கவலைப்படவில்லை என்றும் போப் பிரான்சிஸ் கூறினார். ஆனால் அவர் இதைப் பற்றி விரிவாகக் கூறவில்லை.
போப் பிரான்சிஸ் கடந்த ஆண்டு ராய்ட்டர்ஸிடம் அளித்த பேட்டியில், 2021 அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு செலுத்தப்பட்ட மயக்க மருந்து காரணமாக நீண்ட கால எதிர்மறையான பக்க விளைவுகளை சந்தித்ததால், முழங்கால் பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை செய்ய விரும்பவில்லை என்று கூறினார்.
கடந்த ஜூலை மாதம், கனடா பயணத்திலிருந்து திரும்பிய போப் பிரான்சிஸ், தனது முதுமை மற்றும் நடைபயிற்சி சிரமம், தனது போப்பாண்டவரின் புதிய, மெதுவான கட்டத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்று ஒப்புக்கொண்டார்.
ஆனால் அதன் பின்னர் கஜகஸ்தான் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு சென்ற அவர் கடந்த மாதம் காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஏப்ரல் பிற்பகுதியில் ஹங்கேரி, ஆகஸ்டில் போர்ச்சுகல் மற்றும் செப்டம்பரில் பிரெஞ்சு நகரமான மார்செய்லுக்குச் செல்வதற்கும் அவர் உறுதியளித்துள்ளார். மேலும் ஏற்பாடு செய்ய முடிந்தால், மார்சேயில் இருந்து மங்கோலியா செல்ல விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
2013 ஆம் ஆண்டில் உடல்நலக் காரணங்களுக்காக ராஜினாமா செய்த தனது மறைந்த முன்னோடியான பெனடிக்ட் XVI இன் வரலாற்று முடிவைப் பாராட்டிய பின்னர், தான் மிகவும் இயலாமையாக இருந்தால் மட்டுமே பெனடிக்ட்டின் முடிவை பின்பற்றுவேன் என்று போப் பிரான்சிஸ் சுட்டிக்காட்டினார்.
மார்ச் 12 அன்று ஒளிபரப்பப்பட்ட ஒரு நேர்காணலில் இத்தாலிய சுவிஸ் தொலைக்காட்சி RSI, போப் பிரான்சிஸிடம், நீங்கள் பதவி விலகுவதற்கு என்ன நிபந்தனை வழிவகுக்கும் என்று கேட்டதற்கு, “ஒரு சோர்வு, விஷயங்களை தெளிவாகப் பார்க்க உங்களை அனுமதிக்காது. தெளிவின்மை, சூழ்நிலைகளை எவ்வாறு மதிப்பிடுவது என்பதை அறிவது,” போன்றவை என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil