Advertisment

கொரோனா பரிசோதனை செய்துகொண்ட போப் ஆண்டவர் - ரிசல்ட் சுபம்

Pope francis coronavirus : உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ரோமன் கத்தோலிக்க தலைவர் போப் பிரான்சிஸிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pope francis, pope francis coronavirus, pope francis unwell, coronavirus death toll, coronavirus latest news

pope francis, pope francis coronavirus, pope francis unwell, coronavirus death toll, coronavirus latest news

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ரோமன் கத்தோலிக்க தலைவர் போப் பிரான்சிஸிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சீனாவில் தோன்றி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் சிக்கி சர்வதேச அளவில் இதுவரை .3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இத்தாலியில் மட்டும் 52 பேர் பலியாகியுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

போப் பிரான்சிஸ், கடந்த சில நாட்களாக இருமல் மற்றும் தும்மலால் அவதிப்பட்டு வந்தார். இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், உடனடியாக போப் பிரான்சிஸிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் முடிவில், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளதாக இத்தாலியில் வெளியாகும் இல் மெசேஜோரோ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

போப் பிரான்சிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க வாடிகன் செய்தித்தொடர்பாளர் மாடீயோ புரூனி மறுத்துவிட்டார்.

83 வயதான போப் பிரான்சிஸிற்கு, சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது போப் பிரான்சிஸிற்கு ஏற்பட்ட இருமல் மற்றும் தும்மல் காரணமாக, மக்கள் சந்திப்பு மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவது இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ரோமில் உள்ள தேவாலயத்தில் நடைபெற உள்ள ஒருவார கால பிரார்த்தனை கூட்டத்திற்காக மூத்த குருமார்களுடன், போப் பிரான்சிஸ் ஆலோசனை நடத்தியிருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக, அவர் தனது வீட்டில் இருந்தே, இந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொள்வார் என்று தெரிவீக்கப்பட்டது.

போப் பிரான்சிஸ் இல்லாமல், முதல்முறையாக தேவாலயத்தில் வாராந்திர பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Pope Francis
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment