கத்தோலிக்க திருச்சபையில் பாலியல் புகார்களா? பதில் அளிக்க போப் மறுப்பு

போப் பிரான்சிஸ் பதவி விலக வேண்டும் - வாடிகன் திருச்சபை முன்னாள் உயர் அதிகாரி

By: Updated: August 28, 2018, 03:10:59 PM

போப் பதவி விலக வேண்டும் : வாடிகன் திருச்சபையின் முன்னாள் உறுப்பினர் ஆர்ச் பிஷப் கார்லோ மரியா விகானோ 11 பக்க அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் கத்தோலிக்க திருசபையில், முக்கியமாக அமெரிக்க பாதிரியார் தியோடர் மெக்காரிக்கின் பாலியல் குற்றங்கள் அனைத்தையும் முன்பே அறிந்திருந்தார் போப் பிரான்சிஸ்.

ஆனால் அவர் மீது நடவடிக்கை எதையும் எடுக்காமல் போப் பிரான்சிஸ் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி அந்த அறிக்கையில் வெளியிட்டிருந்தார் விகானோ.

11 பக்க அறிக்கைப் பற்றி பதில் அளிக்க மறுத்த போப்

போப் நேற்று அயர்லாந்து சென்று திரும்பி வந்திருக்கிறார். அங்கிருத்து வாடிகனிற்கு திரும்பி வரும் போது விமானத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் போப். அப்போது பேசிய போப் பிரான்சிஸ் “முன்னாள் வாடிகன் திருச்சபை உயர் அதிகாரி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு என்னால் பதில் அளிக்க முடியாது” என்று கூறினார்.

இது தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் என்னை எந்தவிதமான கேள்விகளையும் கேட்க வேண்டாம். அந்த 11 பக்க அறிக்கை பற்றி பதில் சொல்ல முடியாது.

செய்தியாளர்கள் அதை கூர்ந்து படித்து உங்களின் கேள்விகளுக்கான பதிலை கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் உங்களின் அனைத்துவிதமான சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் அங்கேயே பதில் இருக்கிறது என்று கூறினார்.

To read this article in English

அமெரிக்க பாதிரியார் மெக்கரிக்கின் பல்வேறு குற்றங்களை திருச்சபை மறைத்தும், கண்டுகொள்ளாமலும் விட்டுவிட்டது என்று விகானோ குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

88 வயதான மெக்கரிக் அமெரிக்காவில் ஆர்ச் பிஷப்பாக பணியாற்றி வந்தார். 50 வருடங்களுக்கு முன்னாள், சிறுவர்கள் மற்றும் வயது வந்தவர்களை நிர்பந்தித்து பாலியல் உறவு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Pope francis refuses to respond to document that alleges he covered up sexual abuse

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X