வாழ்த்து சொன்னபோது கையைப் பிடித்து இழுத்த பெண்; கோபத்தில் லேசாக அடித்த போப்!
போப் பொதுமக்கள் மற்றும் யாத்ரீகர்களை வரவேற்று வாழ்த்தியபோது பெண் ஒருவர் அவருடைய கையைப்பிடித்து இழுத்ததால் கோபமடைந்த போப் அவரை லேசாக அடித்த வீடியோ காட்சி இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
Pope Francis, Pope Francis slapped woman's hand, போப் பிரான்சிஸ், woman grabbed pope francis hand, போப் கையைப் பிடித்து இழுத்த பெண், pope francis shoting a woman, vatican city, pope francis viral video
போப் பிரான்சிஸ் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் குழந்தைகள் மற்றும் யாத்ரீகர்களை வரவேற்று வாழ்த்தியபோது, பெண் ஒருவர் அவருடைய கையைப் பிடித்து இழுத்ததால் கோபமடைந்த போப் அந்த பெண்ணின் கைகளை லேசாக அடித்து தட்டிவிட்டார். இந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட வீடியோ வைரல் ஆகியுள்ளது.
Advertisment
மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?
போப் பிரான்சிஸ் வாட்டிகன் நகரத்தின் மையத்தில் உள்ளூர் மக்களைப் பார்ப்பதற்கு செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தார். செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ்ஸை பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். அப்போது, போப் அங்கே கூட்டத்தில் இருந்தவர்களைப் பார்த்து கை அசைத்தபடி ஒரு குழந்தையை தொட்டு ஆசிர்வதித்தார். பின்னர், கூட்டத்தைவிட்டு விலகி செல்லும்போது, கூட்டத்தில் நின்றிருந்த ஒரு பெண் திடீரென போப்பின் கைகளைப் பிடித்து இழுத்தார். இதனை சற்றும் எதிர்பாராத போப் ஒரு கணம் திகைத்துப் போனார். அந்த பெண் மேலும் வலுவாக போப்பின் கைகளைப் பிடித்து இழுந்ததால், கோபமடைந்த போப் அந்த பெண்ணின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதற்காக அந்த பெண்ணின் கைகளை லேசாக அடித்து தட்டிவிட்டார். அப்போது அவர் ஏதோ முனுமுனுத்து திட்டினார். அப்போது, அந்த பெண்ணும் போப்பிடம் ஏதோ சொல்ல முயன்றார். ஆனால், அது தெளிவாக இல்லை. இந்த நிகழ்வு எல்லாமே வீடியோவில் பதிவாகியுள்ளது.
போப் பொதுமக்கள் மற்றும் யாத்ரீகர்களை வரவேற்று வாழ்த்தியபோது பெண் ஒருவர் அவருடைய கையைப்பிடித்து இழுத்ததால் கோபமடைந்த போப் அவரை லேசாக அடித்த வீடியோ காட்சி இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
போப் பிரான்சிஸ் பல முற்போக்கான செயல்களை செய்து உலக அரங்கில் ஒரு முன்மாதிரியான போப் என்று பெயர்பெற்றிருந்த நிலையில் அவருடைய இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.