Advertisment

அடுத்தடுத்து ஏற்பட்ட நில நடுக்கம்; உறைந்து போன நியூசிலாந்து!

தெற்கு பசுபிக் பகுதிகளில் கடுமையான தாக்கம் ஏற்படுத்தும் சுனாமிக்கு வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
அடுத்தடுத்து ஏற்பட்ட நில நடுக்கம்; உறைந்து போன நியூசிலாந்து!

Powerful quake hits off New Zealand, prompting evacuations : இன்று காலை 8.1 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் நியூசிலாந்து நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், தெற்கு பசிஃபிக்கில் இருக்கும் நாட்டினருக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது இன்று ஏற்பட்ட இரண்டாவது நில நடுக்கமாகும்.

Advertisment

நேற்று நள்ளிரவு 7.3 புள்ளி ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கதால் பலரும் அச்சத்தில் இருந்தனர். இரண்டு நிலநடுக்கங்களும் எச்சரிக்கை மணியை அடிக்க, எந்தவிதமான உயிர் மற்றும் உடமை சேதங்களும் இன்றி நியூசிலாந்து மக்கள் உயிர் பிழைத்துள்ளனர்.

மேலும் படிக்க : ட்வீட்கள் காரணமாக வெள்ளை மாளிகையில் முக்கிய வாய்ப்பை இழந்தார் இந்திய வம்சாவளி

வடக்கு தீவில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு உடனே செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை அறிவித்துள்ளனர். மேலும் சுனாமி ஏற்படுவதற்கான சாத்திய கூறுகளையும் தெரிவித்துள்ளனர்.

பிரெஞ்ச் பாலினேசியா பகுதிகளில் மூன்று மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பும் என்றும், நியூ, நியூ கலெடோனியா மற்றும் சாலமன் தீவுகளில் 1 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பும் என்றும் அமெரிக்காவின் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

New Zealand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment