அஹமத்
கனடாவில் குடியேற வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா உங்களுக்கு... இப்பவே தயாராகுங்க... அடுத்த ஆண்டில் இருந்து லட்சக்கணக்கில் குடியேற்ற அனுமதி கொடுக்கப் போகிறது, கனடா அரசு.
2018 – ல் குடியேற்ற அனுமதி 310,000 ஆகவும், 2020 – ல் 340,000 ஆக குடியேற்ற அனுமதி அதிகரிக்கவிருப்பதாக கனடா அரசின் குடிவரவு சேவை அறிவித்துள்ளது.
மேலும் இளம் வயது ஐரிஷ் மக்களுக்கு 10,000 பணிக்கால விசாவினை வழங்கவிருப்பதாக கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
தற்போது, ஐரிஷ் மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த விசா, 18 மற்றும் 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்றன. மேலும் இளம் தொழில்முறை மற்றும் விடுமுறை நாட்களில் பணியாற்ற விரும்புவர்களுக்கும் விசா வழங்கப்படுகிறது.
கனடாவில் இரு ஆண்டுகள் வரை வாழவும் மற்றும் வேலை செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி சர்வதேச கூட்டுறவு கூட்டு விசாக்கள்(International Co-Op visas) ஒரு வருடம் வரை செல்லுபடியாகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஐரிஷ் இளைஞர்கள் கனடாவிற்கு குடிபெயர்வதால், அவர்களுக்காக இந்த பணிக்கால விசாவினை அறிவித்துள்ளோம் என கனடா தெரிவித்துள்ளது.
கனடா அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வயது பிரச்சனை, இறப்பு விகிதங்கள், பொருளாதார பிரச்சனை மற்றும் தொழிலாளர்கள் தேவை ஆகிய காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த குடியேற்ற திட்டம் விரிவுபடுத்தப்படும்.
இந்த குடியேற்றத்தின் மூலம் கனடிய சமூகம் மேம்படும் என்றும் கனடிய மத்திய பொருளாதாரம் வளர்ச்சியடையும், அதே சமயத்தில் எல்லை பாதுகாப்புகள், கனடியர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு ஆகியவை கவனத்தில் கொள்ளப்படும்" என தெரிவித்துள்ளன.
"உலகளாவிய பொருளாதார முன்னணியில் நமது நாட்டைக் காப்பாற்றுவதில் குடியுரிமை ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.
நமது நாட்டின் மக்களிடமிருந்து எழும் எதிர்கால உழைப்பு சவால்களை எதிர்கொள்ள, G7 (உலகின் மிக முன்னேறிய பொருளாதார நாடுகள்) – இல் மற்ற நாடுகளை விட கனடா சிறந்த நிலையில் உள்ளது "என தெரிவித்துள்ளது.
விசாவினை விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்க்கில் செல்லவும்
www.cic.gc.ca/english/