scorecardresearch

மோடி ஜூன் 22-ல் அமெரிக்கா பயணம்; இரவு விருந்து அளிக்கும் பிடன்

அமெரிக்காவுக்கு வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி பிரதமர் மோடி பயணம்; விருந்து அளித்து உபசரிக்கும் அதிபர் ஜோ பிடன்

biden modi
ஜூன் 22-ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரதமர் நரேந்திர மோடிக்கு விருந்தளிக்கிறார் (ராய்ட்டர்ஸ், கோப்பு படம்)

PTI

அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணமாக ஜூன் 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். அவரது இந்த பயணத்தின்போது, ஜூன் 22 இரவு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இரவு விருந்து அளிக்கிறார் என்று வெள்ளை மாளிகை புதன்கிழமை அறிவித்துள்ளது.

“வரவிருக்கும் பயணம் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஆழமான மற்றும் நெருக்கமான கூட்டாண்மை மற்றும் அமெரிக்கர்களையும் இந்தியர்களையும் ஒன்றாக இணைக்கும் குடும்பம் மற்றும் நட்பின் அன்பான பிணைப்புகளை உறுதிப்படுத்தும்” என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் இந்த பயணம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு கூறினார்.

”பிரதமர் மோடியின் பயணம், சுதந்திரமான, திறந்த, வளமான மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக்கிற்கான இரு நாடுகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் என்றும், பாதுகாப்பு, சுத்தமான எரிசக்தி மற்றும் விண்வெளி உள்ளிட்ட மூலோபாய தொழில்நுட்ப கூட்டாண்மையை உயர்த்துவதற்கான இரு நாடுகளின் உறுதியான உறுதிமொழியை வலுப்படுத்தும்” என்றும் கரீன் ஜீன்-பியர் கூறினார்.

“இரு நாடுகளின் கல்விப் பரிமாற்றங்கள் மற்றும் மக்களிடையேயான உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகள், அத்துடன் காலநிலை மாற்றம், பணியாளர்களின் மேம்பாடு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றிலிருந்து பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் இரு நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து தலைவர்கள் விவாதிப்பார்கள்,” என்றும் கரீன் ஜீன்-பியர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: President biden host pm narendra modi official state visit to us

Best of Express